தமிழ் நேசன் அடிகளாரின் “இரக்கத்தின் இராகங்கள்” இறுவட்டு வெளியீட்டு விழா---- (19.07.2016)
மன்னார் மறைமாவட்ட சமூகத்தொடர்பு அருட்பணி மையம் கலையருவியின் இயக்குனரும் மன்னா பத்திரிகையின் ஆசிரியருமான அருட்திரு. தமிழ் நேசன் அடிகளாரின் எண்ணம் எழுத்து இயக்கத்தில் உருவாகிய “இரக்கத்தின் இராகங்கள்” இறுவட்டு (சி.டி.) வெளியீட்டு விழா எதிர்வரும் செவ்வாய்க் கிழமை (19.07.2016) மாலை 3.00 மணிக்கு மன்னார் தாழ்வுபாடு வீதியில் உள்ள குடும்பநலப் பணியக மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இறை இரக்க ஆண்டை முன்னிட்டு இந்த இறுவட்டு வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்கிறார். அருட்திரு. டக்ளஸ் மில்ரன் லோகு அடிகளார் இந்நிகழ்வுக்கு தலைமைதாங்குகிறார். அருட்திரு. லக்ஸ்ரன் டி சில்வா அவர்கள் வெளியீட்டுரை நிகழ்த்துகின்றார். அருட்திரு. அன்புராசா அடிகளார் இறுவட்டின் ஆய்வுரையை நிகழ்த்துகின்றார். மன்னார் மறைமாவட்டத்தின் நான்கு மறைக்கோட்ட முதல்வர்களும் ஏனைய பிரமுகர்களும் சிறப்பு மற்றும் கௌரவ விருந்தினர்களாகக் கலந்துகொள்கின்றனர். இந்நிகழ்வில் கலந்துகொள்ள அனைவரும் அழைக்கப்படுகின்றனர்.
தமிழ் நேசன் அடிகளாரின் “இரக்கத்தின் இராகங்கள்” இறுவட்டு வெளியீட்டு விழா---- (19.07.2016)
Reviewed by Author
on
July 18, 2016
Rating:

No comments:
Post a Comment