மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக யூட் றதனி நியமனம்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராகவும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும் வைத்திய கலாநிதி திருமதி யூட் றதனி பொறுப்பேற்றுள்ளார்.
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய அவர், கடந்த 14 ஆம் திகதி முதல் தனது புதிய கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையிலே வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றி வந்த வைத்திய கலாநிதி திருமதி யூட் றதனி மன்னார் மாவட்டத்துக்கு இடமாற்றம் பெற்றுள்ளார்.
சிரேஸ்ட வைத்திய நிர்வாக உத்தியோகத்தர்களின் 2016 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றத்தின் பிரகாரமும் கடந்த 2011ஆம் ஆண்டு தொடக்கம் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றி வந்த நிலையிலேயே இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராகவும், மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்ட நிலையில் கடந்த 14 ஆம் திகதி முதல் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக யூட் றதனி நியமனம்
Reviewed by Author
on
July 25, 2016
Rating:

No comments:
Post a Comment