இலங்கைக்கு கடத்திவரப்பட்ட விலை உயர் புறாக்களுடன் நெடுந்தீவில் மூவர் கைது!
சட்டவிரோதமான முறையில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட விலை உயர்ந்த புறாக்களுடன் மூவர் நெடுந்தீவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 237 விலை உயர்ந்த புறாக்களை இந்தியாவில் இருந்து இரகசியமான முறையில் பிளாஸ்ரிக் கொள்கலன்களுக்குள் மறைத்து கடல் மார்க்கமாக புறாக்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த புறாக்களை சட்டவிரோதமாக கடத்தி வந்த சந்தேகத்தின் பேரில் மூவர் நெடுந்தீவு கடற்படை மற்றும் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைகளை அடுத்து கைதான மூவரும் 237 புறாக்களும் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் படகும் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்கதாக நெடுந்தீவு பொலிசார் தெரிவித்தனர்.
Reviewed by Vijithan
on
January 14, 2026
Rating:


No comments:
Post a Comment