அண்மைய செய்திகள்

recent
-

மாந்தை மாதா ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியும், சிறப்பு குணமாக்கல் வழிபாடுகளும்.

இன்றைய தினம் நடைபெறவுள்ள மாந்தை அன்னை வழக்குத் தொடர்பில் தமக்கு நீதியான தீர்வு கிடைக்க வேண்டி மறைமாவட்ட கத்தோலிக்க மக்கள் மாந்தைப்பதியில் நேற்றைய தினம் ஒன்று கூடி வழிபாட்டினை ஏறெடுத்தனர். மன்னார் மறைமாவட்டத்தின் பல பங்குகளிலிருந்தும் சுமார் 3000 இற்கு மேற்பட்ட மக்கள் இதில் பங்கெடுத்தனர். எனினும் எவரும் சர்ச்சைக்குரியதாக கருதப்படும் மடு அன்னையின் திருச்சொருபம் அமைந்த பகுதியில் பிரவேசிக்காததைக் காணக்கூடியதாக இருந்தது.
கத்தோலிக்க வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இதனுடன் தொடர்புடைய வரலாற்றுச் சம்பவங்களை நினைவுகூர்ந்து விசுவாச மிகுதியில் மங்கள் உணர்ச்சிபொங்க பரவச நிலையில் செபித்து வேண்டிய நிகழ்வு கத்தோலிக்க மக்களின் வன்முறையற்ற அமைதி, ஆன்மீக முன்னெடுப்புகளை பறைசாற்றுவதாகவும் இறைமகன் இயேசுவின் சாய்சியவாழ்வை அவர்கள் வாழ்வதையும் பிறருக்கும் எடுத்துக்காட்டியிருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. வழிபாட்டின் எந்தவொரு சந்தர்பத்திலும் மத நல்லிணக்கத்தை குழப்பும் மத குரோத உணர்வுகளை தூண்டிவிடும் வார்த்தைகள் பிரயோகிக்கப்படவில்லை. மாறாக அமைதியும் இறைவேண்டல் மூலம் வெற்றியுமே வழிபாட்டின் கருப்பொருளாக அமைந்தது.







மாந்தை மாதா ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியும், சிறப்பு குணமாக்கல் வழிபாடுகளும். Reviewed by NEWMANNAR on July 11, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.