முன்னாள் போராளி தம்பதிகள் பிணையில் விடுதலை.
கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் வவுனியா நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் நீதிபதி எஸ்.லெனின்குமார் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.
முன்னதாக, முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான், சிவநகர் பகுதியில் வைத்து, முன்னாள் போராளி தம்பதியினரான இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
முன்னாள் போரளியென தெரிவித்து அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவத்துடன், முன்னாள் போராளிகளினது கையடக்கத் தொலைபேசியின் எமி இலக்கம் தொடர்புப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையிலேயே குறித்த இருவரையும் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் கூறியதாக போராளிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்தார
இதேவேளை, இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 24ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் போராளி தம்பதிகள் பிணையில் விடுதலை.
Reviewed by NEWMANNAR
on
July 08, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 08, 2016
Rating:


No comments:
Post a Comment