அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை கடலில் மீன்பிடிக்க இந்திய மீனவருக்கு அனுமதி இல்லை.-ரணில்


இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு ஒருபோதும் அனுமதி அளிக்கப்படாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

கடலடி இழுவைப் படகு மீன்பிடி முறையை நிறுத்துவதற்கு இந்தியாவும் இலங்கையும், பரஸ்பரம் இணங்கியுள்ளன. இதனை நிறைவேற்றுவது தொடர்பாக இப்போது கலந்துரையாடப்படுகிறது.


இலங்கை கடற்படையின் தரவுகளின்படி, இலங்கை கடலில் தற்போது 1000 இந்திய இழுவைப் படகுகள் சட்டவிரோதமாக மீன்பிடித்து வருகின்றன.

இந்த மீன் பிடி முறையினால் உள்ளூர் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன் கடல் வளங்களும், அழிக்கப்படுகின்றன.

வடக்கு கடலில் இந்திய மீனவர்களின் ஊடுருவல் பிரச்சினைக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு காணப்படும்.

எனினும், எவ்வாறு இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது என்று அரசாங்கம் இன்னமும் இறுதி முடிவை எடுக்கவில்லை. வடபகுதி மீனவர்களுடன் கலந்துரையாடியே இறுதி முடிவு எடுக்கப்படும்.

இந்த விடயம் தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சருடன், இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேச்சு நடத்தியுள்ளார்.

இலங்கை கடற்படையும், இந்திய கடலோரக்காவல்படை மற்றும் இந்திய கடற்படையுடன் பேச்சு நடத்தியுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு இலங்கைஅரசாங்கம் அனுமதிப்பத்திர முறையை கொண்டு வரவுள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இலங்கை கடலில் மீன்பிடிக்க இந்திய மீனவருக்கு அனுமதி இல்லை.-ரணில் Reviewed by NEWMANNAR on July 08, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.