பொருளாதார மையத்தை எங்கே அமைப்பது? அவசரமாக ஒன்று கூடும் த.தே.கூட்டமைப்பு
வடக்கில் பொருளாதார மையத்தை அமைப்பது தொடர்பாக ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளுக்கு தீர்வு காணும் முகமாக அவசரமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தை நாளை ஞாயிற்றுக்கிழமை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூட்டுகிறார்.
கொழும்பில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.
வடக்கில் பொருளாதார மையத்தை எங்கே அமைப்பது என்பது தொடர்பில் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து எல்லோரும் ஒருமித்த தீர்மானத்துடன் முடிவொன்றை எட்டுவதற்கு சம்பந்தன் இக் கூட்டத்தை கூட்டியுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.
வடக்கில் பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்திலா, ஓமந்தையிலா அமைப்பது என்பது குறித்து இழுபறி நிலை தொடர்கையில் வடக்கில் அனைவருக்கும் பொதுவாக அதனை மாங்குளத்தில் அமைக்குமாறு விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுக்கத் தொடங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு இடையே நிலவி வரும் பல்வேறு கருத்து முரண்பாடுகளுக்கும் தீர்வு காணவும் இவை தொடர்பாக இணக்கப்பாட்டுடன் கூடிய ஆரோக்கியமான பல முடிவுகளையும் தமிழ் மக்களுக்கு நீண்ட கால நன்மை பயக்கக்கூடிய பல தீர்மானங்களையும் எடுக்க முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.
வடக்கில் பொருளாதார மையத்தை எங்கே அமைப்பது என்பது தொடர்பில் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து எல்லோரும் ஒருமித்த தீர்மானத்துடன் முடிவொன்றை எட்டுவதற்கு சம்பந்தன் இக் கூட்டத்தை கூட்டியுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.

அத்துடன் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு இடையே நிலவி வரும் பல்வேறு கருத்து முரண்பாடுகளுக்கும் தீர்வு காணவும் இவை தொடர்பாக இணக்கப்பாட்டுடன் கூடிய ஆரோக்கியமான பல முடிவுகளையும் தமிழ் மக்களுக்கு நீண்ட கால நன்மை பயக்கக்கூடிய பல தீர்மானங்களையும் எடுக்க முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார மையத்தை எங்கே அமைப்பது? அவசரமாக ஒன்று கூடும் த.தே.கூட்டமைப்பு
Reviewed by NEWMANNAR
on
July 02, 2016
Rating:

No comments:
Post a Comment