வவுனியாவில் குடும்பப்பெண் கூட்டு வன்புணர்வு!
வவுனியா புளியங்குளத்தில் 32 வயதுடைய குடும்பப்பெண் ஒருவர் மூன்று நபர்களால் கூட்டு பாலியர் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 28 ஆம் திகதி புளியங்குளம் பகுதியில் கணவன் வெளிநாடு சென்றுவிட்ட நிலையில் நான்கு பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்த குடும்பப் பெண் ஒருவருக்கே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண்ணின் வீட்டிற்குள் அனுமதியில்லாமல் நுழைந்த மூன்று நபர்கள் அப்பெண்ணின் குழந்தைகளை ஒரு அறைக்குள் பூட்டி வைத்து விட்டு குறித்த பெண்ணிற்கு சாராயத்தை பருக்கி வாயை துணியால் கட்டி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதுடன் அப்பெண்ணின் தலைமுடியையும் கத்தரித்துள்ளனர்.
இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட பெண் தற்போது வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.
கடந்த 28 ஆம் திகதி புளியங்குளம் பகுதியில் கணவன் வெளிநாடு சென்றுவிட்ட நிலையில் நான்கு பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்த குடும்பப் பெண் ஒருவருக்கே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட பெண் தற்போது வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.
வவுனியாவில் குடும்பப்பெண் கூட்டு வன்புணர்வு!
Reviewed by NEWMANNAR
on
July 02, 2016
Rating:

No comments:
Post a Comment