அண்மைய செய்திகள்

recent
-

பேருந்தின் சில்லுக்கு இரையாகிய தாய்நாடு திரும்பிய இளைஞன்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஏழாம் கட்டைச் சந்திக்கு அருகாமையில் நேற்று இரவு 7.15 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

தனது வீட்டில் இருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளையில் யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறைக்கு சென்று கொண்டிருந்த இ.போ.ச பேருந்துடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பேருந்தின் சக்கரங்களினுள் நசியுண்டதால் படுகாயமுற்றிருந்த இளைஞனை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் சிங்கைநகர் புலோலி தெற்கைச் சேர்ந்த 26 வயதுடைய மினிஸ்வரன் விஜிதரன் என்ற இளைஞர் என்றும் குறித்த நபர் வெளிநாட்டில் பணிபுரிவதாகவும் அண்மையில் இங்கு வருகை தந்திருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பேருந்தின் சில்லுக்கு இரையாகிய தாய்நாடு திரும்பிய இளைஞன் Reviewed by NEWMANNAR on July 10, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.