பிரித்தானியா அதிகாரிகள் வடக்கு சுகாதார அமைச்சரை சந்தித்தனர்!
பிரித்தானியா குடிவரவு-குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலங்கையிலிருந்த பிரித்தானியாவுக்கு சென்று அடைக்கலம் கோரியவர்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
தற்போது நாட்டின் அரசியல் சூழ்நிலை மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தஞ்சம் கோரியவர்களில் தாமாக முன்வந்து விருப்பத்துடன் நாடுதிரும்புபவர்கள் மற்றும் நாட்டிற்கு மீள திருப்பி அனுப்பபடவுள்ளவர்கள் தொடர்பிலும் அவர்களுக்கான சுகாதார வசதி, பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
பிரித்தானியா அதிகாரிகள் வடக்கு சுகாதார அமைச்சரை சந்தித்தனர்!
Reviewed by Author
on
July 18, 2016
Rating:

No comments:
Post a Comment