வடக்கு பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைப்பது! சீ.வி, மாவை சந்திப்பு...
வடமாகாண சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோருக்கு இடையில் இன்று விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த சந்திப்பு இன்று காலை யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று காலை 11.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
வட மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலா? அல்லது தாண்டிக்குளத்திலா? அமைப்பதென கடுமையான சர்ச்சைகள் உருவாகியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பிலலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இருவரும் வடமாகாணத்திற்கு கிடைக்கவிருக்கும் சுமார் 2 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி திரும்ப கூடாது என ஒருங்குபட்ட நிலையில் பேசியுள்ளனர்.
தாண்டிக்குளமா? அல்லது ஓமந்தையா? என தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் எழுந்திருக்கும் குழப்ப நிலையை கருத்தில் கொண்டு இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும்.
குறித்த நோக்கத்திலேயே தாம் இந்தப் பணியை முன்னெடுத்து கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர மாவை சேனாதிராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.
இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா,
பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையிலா? அல்லது தாண்டிக்குளத்திலா? அமைப்பது என எமக்குள்ளேயே எழுந்திருக்கும் சர்ச்சைகள் எமக்கு மன வருத்தமளிப்பவையாக இருக்கின்றது.
இதன அடிப்படையில் சிலருடைய வேண்டுகோளுக்கு இணங்க நேற்றய தினம் ஓமந்தை மற்றும் தாண்டிக்குளம் காணிகளை பார்வையிட்டுள்ளேன்.
குறித்த இரு காணிகளிலும் குறை சொல்லும் அளவுக்கு எதுவும் இல்லை. எங்களுடைய நிலைப்பாடு எங்களுடைய விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் நன்மையடைய வேண்டும்.
அத்துடன், நுகர்வோர் நன்மையடைய வேண்டும். பொருளாதார மத்திய நிலையம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேற்றப்பட வேண்டும்.
அதற்கு முன்னர் பொருளாதார மத்திய நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி திரும்ப கூடாது. எனவே அதனை நான் முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன்.
குறித்த விடயம் தொடர்பில் விரைவாக தீர்மானம் எடுக்கும்படி கேட்டிருக்கின்றேன். மேலும் ஓமந்தையில் தெரிவு செய்யப்பட்ட காணியில் சில சட்ட சிக்கல்கள் வரும் என நான் நினைக்கிறேன்.
அவ்வாறான பிரச்சினைகள் வந்தால், உடனடியாக தாண்டிக்குளம் என்ற தீர்மானத்தை எடுக்கவேண்டும் என்பதையும் நான் கோரியுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இச்சந்திப்பு தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கேட்டபோது,
இந்தச் சந்திப்பில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக பேசினோம். நன்மைகள், தீமைகள் தொடர்பாகவும் பேசினோம்.
பாராளுமன்ற உறுப்பினர், மாவை சேனாதிராஜ அவர்கள் குறித்த இரு காணிகளையும் பார்வையிட்டுள்ளார். நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முடிவு பெறப்படவேண்டும்.
எனினும் இது தேவையற்ற ஒன்று. இது கிராமப்புறம் இங்கே அவர்களுடைய முடிவு தேவையில்லை.
அவ்வாறிருந்தாலும் 2010ஆம் ஆண்டு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சகல அதிகாரிகளும் அதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றார்கள்.
காணியை உடனடியாக எடுக்க கூடிய நிலையில் இருக்கின்றது. எனவே நாங்கள் இந்த விடயத்தில் உறுப்பினர்களின் கருத்துக்களை எதிர்பார்த்திருக்கின்றோம்.
இதில் பெரும்பாலும் ஓமந்தையிலேயே பொருளாதார மத்திய நிலையம் அமையும் சாத்தியம் உள்ளது. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வடக்கு பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைப்பது! சீ.வி, மாவை சந்திப்பு...
Reviewed by Author
on
July 11, 2016
Rating:

No comments:
Post a Comment