அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கோட்டை(சென்-ஜோர்ச் கோட்டை-St.George Fort) ஒரு வரலாற்று சின்னம் ....முழுமையான படத்தொகுப்பு


மன்னார் மண்ணின் அடையாளங்களில் பிரதானமானது மன்னார் கோட்டை என அழைக்கப்படும் சென்-ஜோர்ச் கோட்டை மன்னார் மண்ணின் பெருமைகளில் ஒன்று ஆனால் இன்று அழிந்து கொண்டிருக்கும் அவலநிலையை யாரும் கண்டுகொள்ளவில்லை….  ஏன்….???

1560ஆண்டில் இருந்து 2016 இன்று வரை பல சிதைவுகள் அழிவுகள் சேதங்களைக்கண்டு இன்றும் எம் கண்முன்னே காட்சிதருகின்ற இந்த வரலாற்றுச்சின்னத்தினை இனிவரும் சந்ததியினருக்கும் எமது மன்னார் மாவட்டத்தின் பெருமையை பழமையை நிலையான வரலாறாக வேண்டுமா…. அப்படியானால் இன்றே ஒன்றினைவோம் வாருங்கள்…

மன்னார் மாவட்டத்தின் அடையாளங்களாக----
    மன்னார் கோட்டை(சென்-ஜோர்ச் கோட்டை)
    தொங்கு பாலம்-தேக்கம்-குஞ்சுக்குளம்
    பெருக்க மரம் -பள்ளி முனை
    மினாரா வெளிச்சவீடு-தலைமன்னார்
    வேதசாட்சிகளின் கல்லறை-தோட்டவெளி
    மன்னார் நகரப்பாலம்
    மடுத்தேவாலயம்
    திருக்கேதீஸ்வரம்
    மன்னார் மண்ணில் அதிகமாக உள்ள கழுதை
    அல்லிராணிக்கோட்டை-அரிப்பு
    தபாற்கந்தோர்-மன்னார் நகரம்
    இஸ்லாமியர்களின் மரியாதைக்குரிய 40 அடி மனிதக்கல்லறை(கீரி-சிலுவை நகர்-தலைமன்னார்-காட்டுப்பள்ளி வாசல்)
இவைபோன்ற இன்னும் எத்தனையோ(பழைய கச்சேரி-கோவில்கள் கேபில் தொடர்புச்சேவை-இரும்புக்கோபுரம் பழைய ஓலைச்சுவடிகள் அரிய புகைப்படங்கள்) பழமையான விடையங்களை பாதுகாப்பின்றி கவனிப்பாரின்றி அழிந்து கொண்டு இருக்கிறது.
 துரித நடவடிக்கைகள் எடுக்காவிடில் முழுவதும் அழிந்து அடையாளம் இல்லாமல் வெறும் உப்புத்தரவைதான் மிஞ்சும்.

மன்னார் மண்ணின் முகவரியாக திகழும் மன்னார்க்கோட்டையை முதற்கட்டமாக அபிவிருத்தி செய்ய வேண்டும்
    கோட்டையை துப்பரவு செய்தல்
    கோட்டையில் கிடக்கும் கழிவுகளை அகற்றல்
    கோட்டைக்குள் இன்னும் மிஞ்சியுள்ள சில ஞாபகார்த்த கல்வெட்டுக்கள் கவனிப்பாரற்று கிடக்கின்றது அதை பாதுகாத்தல்.
    கோட்டையின் விரிசல் அடைந்திருக்கும் சுவர்ப்பகுதிகளை சீர்செய்தல் வேண்டும்.
    கோட்டையினை அழகு படுத்தல்
    கோட்டைக்குள் நூதனசாலையை அமைத்து மன்னாரின் உள்ள அரிய விடையங்களை சேகரித்து பாதுகாப்பான இடமாகவும் பார்வையாளர்களை கவரும் இடமாகவும் மாற்ற வேண்டும்.
    அதிகமான சுற்றுலாப்பயணிகள் வந்து போகும் இடமாக மன்னார்க்கோட்டை உள்ளதால் அதற்குள் நூதன சாலை மற்றும் பூங்கா நூலகம் சிறப்பான பல விடையங்களை உள்ளடக்கலாம். பார்வையாளர்களை கவர்வதோடு சின்னம் அழியாமலும் அதே நேரத்தில் அனைவரும் தெரிந்து கொள்ளக்கூடியதாகவும் இருக்கும்.
    போதிய அளவு இடவசதியுள்ளதால் முக்கிய நிகழ்வுகளையும் நடத்தலாம்.
    பாதுகாப்பு செலவீனத்திற்கு சிறிய கட்டணமும் அறவிடலாம.;
மன்னார் மாவட்ட அபிவிருத்தி என்றதும் வெறுமனே வீதிகள் புனரமைப்பு வாய்க்கால் வெட்டுதல் இவற்றோடு எமது பழமையான சின்னங்களிலும் அக்கறை கொள்ள வேண்டாமா….


மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்ளும் அரச அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றினைந்து செயற்பட்டால் நிலையான அபிவிருத்தி என்பது பழமையினையும் புதுமையினையும் ஒன்றிணைத்ததாகக தேவையின் அடிப்படையில் மக்களுக்கான மனநிறைவை தருவதாகவும் மன்னார் மாவட்டம் ஏனைய மாவட்டங்களை விட முன்னலையில் திகழ வேண்டமாயின் நாம் தான் திறம்பட சேவையாற்ற வேண்டும்….

எல்லா வளங்களும் இருந்தும் நாம் தான் அதை திட்டமிட்டு செயற்படுத்தாமல் இருக்கின்றோம்.தங்களின் பணிகளில் பழமையினையும்….சின்னங்களினையும் உள்வாங்கவேண்டும்….


மன்னார்க் கோட்டை இலங்கையின் மேற்குக் கரையோரத்துக்கு அப்பால் நீளப்பாட்டு அச்சுஇ வடமேற்கு - தென்கிழக்காகஇ கரைக்கு ஏறத்தாழச் செங்குத்தாக இருக்குமாறு மன்னார்த்தீவு பாக்கு நீரிணைக்குள் நீண்டு அமைந்துள்ளது. தீவுக்கும்இ தலைநிலத்துக்கும் இடையே மிகவும் குறுகலான கடற்பகுதியே உள்ளது. மன்னார்க் கோட்டைஇ தீவின் தென்கிழக்கு முனையை அண்டித் தலைநிலத்தைப் பார்த்தபடி அமைந்துள்ளது.
மன்னார்த்தீவை 1560 ஆம் ஆண்டில் போத்துக்கீசர் கைப்பற்றிக்கொண்டனர். இங்கே அவர்கள் தமது கோட்டை ஒன்றைக் கட்டினர். 1658 ஆன் ஆண்டில் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தின் மீது படையெடுப்பதற்கு முன்னர் மன்னார்த்தீவைக் கைப்பற்றினர்.

மன்னார்க் கோட்டை சதுர வடிவமானது. இதன் பக்கங்கள் வடக்குஇ கிழக்குஇ தெற்குஇ மேற்கு ஆகிய திசைகளை நேராக நோக்கியிருக்கும்படி அமைந்துள்ளன. கோட்டையின் நான்கு மூலைகளிலும் கொத்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


இந்தக்கோட்டையை கட்டுவதற்கான கருங்கற்கள் தீவின் நேர்கிழக்கே எதிர்கரையில் அமைந்திருந்த மாந்தை துறைமுக நகரின் மத்தியில் அழிவடைந்த நிலையில் இருந்த திருக்கேதீஸ்வரத்தின் பிரமாண்டமான கோவிலில் இருந்து உடைத்தெடுக்கப்பட்டு" காஸ்மோ றகன்" என்ற கப்பல்களில் ஏற்றிக்கொண்டு வரப்பட்டன போர்த்துக்கேய இராணுவத்தளபதி வைஸ்றோய் கொன்ஸன்ரைன் டி பிரகன்ஸா (viceroy D constatine de brangaza)
என்பவரின் தலைமையில் கத்தறின் மேயர் டொன் ஜோட் சொய்ஸா(Cattarin Majar Don Geord Soysa) என்பவரின் மேற்பார்வையின் கீழ் கட்டி முடிக்கப்பட்டது.
சேன்.ஜோர்ஜ் கோட்டை (St.George Fort) என்று பெயரிடப்பட்ட இந்த இராணுவத்தளத்தினை நிர்மாணிப்பதற்கு இந்தியாவின் கன்னடப்பிரதேசத்தில் இருந்து கூட்டிவரப்பட்ட கட்டுமானிகள் வேலைக்கமர்த்தப்பட்டனர்.
 இவ்வாறு மன்னார்க்கோட்டையை கட்டுவதற்காக வந்தவர்களுக்கு பள்ளிமுனையில் குடியிருக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்களின் வாரிசுகளே இன்றைய பள்ளிமுனை மக்கள் என்ற கருத்து வலுவானதாகவுள்ளது. பள்ளி முனை சென்.லூசியா தேவாலயத்தின் பொன்விழா மலரில் அருட் தந்தை ஞானமுத்து பிலேந்திரன் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

போத்துக்கேயர் மன்னார் தீவில் கோட்டை கட்டிய அக்கால வரலாற்றுச்சுழமைவைப்பற்றி குவைறோஸ் பாதிரியார் Queyros
 பின்வருமாறு வர்ணித்துள்ளார்.


“When the Portuguese arrived in the 16th century Manthai was a ruined city. The temple at Thirukeswaram at Manthai was alrady in ruins. The fort of Mannar was erected in 1560 under the supervision of viceroy D constatine de brangaza out of the stone  of the Thirukeswaram Temple.”

1658ம் ஆண்டு வரை போர்த்துக்கேயரால் நிர்வகிக்கப்பட்ட  மன்னார் கோட்டை அதே ஆண்டில் ஒல்லாந்தரின் ஆட்சி நிர்வாகத்தின் கீழ் கோட்டையை மேலும் பலப்படுத்தி மேற்கு வடக்கு திசைகளில் அகழிகளை அமைத்து பாதுகாப்பினை உறுதிப்படுத்தினர். இராணுவ கேந்திர மையமாக விளங்கிய சென்-ஜோர்ஜ் கோட்டை பல வரலாற்று நிகழ்வுகளைக்கொண்டது.
கோட்டைக்குள்ளே போத்துக்கேயரின் வழிபாட்டிற்காக கட்டப்பட்டிருந்த கத்தோலிக்க தேவாலயம் பின்னர் ஒல்லாந்தரால் அவர்களின் கல்வினிஸ்ட் கிறீஸ்தவ தலமாக மாற்றப்பட்து.

இக்கோட்டைக்குள் உள்ள பல சுவராசியமான விடையங்கள் அழிக்கப்பட்டுள்ளதோடு ஆவணங்களாக தற்போது எதுவும் கிடைக்கப்பெற வில்லை வாய்வழியாக பல கதைகளும் உண்டு அதாவது மன்னார்க்கோட்டைக்கும் அல்லிராணிக்கோட்டைக்கும் நிலக்கீழ் சுரங்கம் இருப்பதாகவும் அந்தச்சுரங்கத்தினுள் இப்போது கொடிய விச ஜந்துக்கள் வாழ்வதாகவும் சொல்கின்றார்கள் இரண்டு துவாரங்கள் அடைக்கப்பட்டுள்ளதால் ஒரு வேளை சுரங்கப்பாதை இருக்கலாம்.

இவையனைத்தும் தெளிவு பெற வேண்டுமானால் ஆய்வுக்கு உட்படுத்தி ஆராட்சிப்பணிகளை தொடர வேண்டும்… சாத்தியமாகுமா….????
அதுவரை நாம் மன்னார்க்கோட்டையை அழகுபடுத்தி பார்த்து ரசிப்பதோடு எமது சந்ததியினருக்கு எடுத்துச்சொல்வோம் பாதுகாத்து கொடுத்துச்செல்வோம்….

மன்னார் கோட்டை தொடர்பான மேலதிக தகவல் இருந்தால் அனுப்புங்கள் படங்களோ..... ஆவணங்களோ...... எழுத்து மூலமோ…

-வை.கஜேந்திரன்-

















































































































































































மன்னார் கோட்டை(சென்-ஜோர்ச் கோட்டை-St.George Fort) ஒரு வரலாற்று சின்னம் ....முழுமையான படத்தொகுப்பு Reviewed by Author on July 10, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.