ஐ.நாவின் விருதை பெறும் வீர மங்கை....
ஐ.நாவின் சர்வதேச கடல்சார் அமைப்பின் Exceptional Bravery என்ற விருது முதன் முறையாக இந்திய கடற்படை பெண் கேப்டன் ராதிகா மேனனுக்கு வழங்கப்படவுள்ளது.
கடலில் வீரச் செயலை செய்பவர்களுக்கு ஆண்டுதோறும் ஐ.நாவின் சர்வதேச கடல்சார் அமைப்பு விருது வழங்குவது வழக்கம்.
இந்நிலையில் 2016ம் ஆண்டுக்கான Exceptional Bravery என்ற விருது இந்திய கடற்படை பெண் கேப்டன் ராதிகா மேனனுக்கு வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த ஆண்டு ஒடிசா மாநிலம் அருகே வங்காள விரிகுடா கடலில் பலத்த மழை, சூறாவளிக் காற்றுக்கும் நடுவே தத்தளித்த 7 மீனவர்களை, ராதிகா மேனன் தலைமையிலான மீட்பு படையினர் மீட்டனர், இதற்காக இவருக்கு விருது வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற நவம்பர் மாதம் 21ம் திகதி லண்டனில் நடைபெறும் விழாவில் ராதிகா மேனனுக்கு விருது வழங்கப்படவுள்ளது.
ஐ.நாவின் விருதை பெறும் வீர மங்கை....
Reviewed by Author
on
July 10, 2016
Rating:

No comments:
Post a Comment