வடக்கு முதல்வரின் இல்லத்தில் கொள்ளையிட்ட நபர் விளக்கமறியலில்..
கொழும்பு கறுவாத்தோட்டம் கேம்பிரிஜ் டெரஸ் பிரதேசத்தில் உள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த கொள்ளையில் ஈடுபட்ட நபர் எனக் கூறப்படும் வெலிபென்னே கே. பிரியந்த பெரேரா என்ற இந்த நபரை எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இன்று உத்தரவிட்டுள்ளார்.
கொள்ளையிட்டதாக கூறப்படும் தங்க ஆபரண்ஙகளின் ஒரு தொகையை சந்தேக நபர் பேருவளை தர்கா நகரில் உள்ள ஒருவருக்கு விற்றுள்ளதுடன் அவர் அதனை உருக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சந்தேக நபர் கறுவாத்தோட்ட பிரதேசத்தில் உள்ள 5 பங்களாக்களிலும், கல்கிஸ்சையில் 10 பங்களாகளிலும் திருடியுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளார்.
வடக்கு முதல்வரின் இல்லத்தில் கொள்ளையிட்ட நபர் விளக்கமறியலில்..
Reviewed by Author
on
July 01, 2016
Rating:

No comments:
Post a Comment