ஒற்றை ஆட்சிக்குள் தீர்வை ஏற்கோம்!
புதிய அரசியலமைப்பில் ஒற் றையாட்சிக்குள் தீர்வு வழங்கப்பட் டால் அதனை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன், தற்போதைய கால சூழலில் தமிழ் மக்கள் பொறுமைகாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று காலை ஒன்பது மணிமுதல் பிற்பகல் ஆறு மணிவரை ‘தடம்மாறுகிறதா தமிழ்த்தேசியம்’ எனும் தொனிப்பொருளிலான கருத்தாய்வு நிலை கருத்துபகிர்வுறவாடல் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எமது தேர்தல் விஞ்ஞானத்தில் குறிப்பிட்டது போன்று நாங்கள் வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி கோரிக்கையை தான் தற்போதும் முன்வைத்து வருகின்றோம். ஒற்றையாட்சிக்குள் தீர்வு வளங்கப்ப்படுமாகவிருந்தால், அதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். வெளிநாட்டு முதலீடுகள், நன்கொடைகளை பெறுவதற்கு அதிகாரம் வேண்டும் என கூறுகின்றோம்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை குழப்புவதற்கு மஹிந்த அணி செயற்பட்டு வருகின்றது. இந்த குழப்பத்திற்கு ஆதரவாக நாம் செயற்பட்டு மீண்டும் ஒரு அழிவு ஆட்சியை ஏற்படுத்தி விடக்கூடாது. தமிழ் மக்கள் இந்த விடயத்தில் பொறுமை காக்க வேண்டும். ஒற்றையாட்சிக்குள் வழங்கப்படும் தீர்வை ஏற்றுக் கொள்ள மாட்டோம். வடக்கு - கிழக்கு இணைந்த கூட்டாட்சி முறையிலான தீர்வையே நாம் கோரி நிற்கின்றோம். இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
தற்போது முக்கிய விடயமாக உள்ள காணாமல் போனோர் தொடர்பில் கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் அமைய வேண்டும். என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளக்கூடியது தான். மேலும் நாட்டில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படவேண்டும். உண்மை கண்டரியப்படுவதன் மூலம் நீதி வழங்கப்பட வேண்டும்.
கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்கள் மீள நடைபெறாமல் இருப்பதற்கான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். நாங்கள் இவற்றை எல்லாம் கோரும் போது சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் என யாரும் கூற முடியாது. அவர்களுக்கும் எங்களுக்குமிடையே கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் அவர்களை நாங்கள் எதிரியாக பார்க்கவில்லை என்றார் அவர்.

ஒற்றை ஆட்சிக்குள் தீர்வை ஏற்கோம்!
Reviewed by Author
on
July 18, 2016
Rating:

No comments:
Post a Comment