அண்மைய செய்திகள்

recent
-

1990ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பேரணியும் வழிபாடுகளும்


மட்டக்களப்பு சித்தான்டி முருகன் ஆலய முன்றலில், 1990ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து இன்று புதன்கிழமை வழிபாட்டு நிகழ்வு ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது 1990ஆம் ஆண்டு படையினரின் சுற்றிவளைப்பினால் காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவினர்கள் கண்ணீர் மல்க ஆலயத்தின் முன்னாள் தேங்காய் உடைத்து தமது வழிப்பாட்டினை செலுத்தினார்கள்.


இதில் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமைகளின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று காலை சித்தான்டி பிள்ளையார் ஆலயத்திலிருந்து பேரணியாக வந்து சித்தான்டி முருகள் ஆலய முன்றலில் தீபச் சுடர் ஏற்றி வைத்தார்கள்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோருக்காக தீபச் சுடர் ஏற்றிவைத்து மௌன அஞ்சலியும் செலுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மனித உரிமைகளின் செயற்பாட்டாளர்களிடம் கையளித்துள்ளனர்.

இதில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

“1990 இல் காணாமல் போன எமது உறவுகளை இந்த நல்லாட்சியிலாவது மீட்டுத் தாருங்கள், 26 வருடங்கள் கடந்த நிலையிலும் முறையிடாத இடங்கள் இல்லை, பரணகம ஆணைக்குழு, காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழு என்பவற்றில் பல முறைப்பாடுகளை பதிவு செய்தும் இதுவரை எந்த பதிலும் இல்லை” என தெரிவித்தார்கள்.
1990ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பேரணியும் வழிபாடுகளும் Reviewed by NEWMANNAR on August 24, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.