அண்மைய செய்திகள்

recent
-

இன்றைய கேள்வி பதில் -24/08/2016

கேள்வி:−

எனது மதிப்பிற்குரிய சட்டத்தரணி சுதன் ஐயா! நான் யாழ்ப்பாணத்திலிருந்து சுகுமார். ஐயா நான் முன்பு வேலை செய்த ஒரு குழுக்கம்பனியில் இராஜினாமா செய்து வேற ஒரு கம்பனியில் வேலைக்குச் சேர்ந்தேன். முன்னைய கம்பனியில் நான் 10 வருடம் வேலை செய்தேன். தற்பொழுது நான் முன்பு வேலை செய்த குழுக்கம்பனியானது மூடப்பட்டுவிட்டது. ஆயினும் தொழில் முதல்வர் கொழும்பில் வசித்து வருகின்றார். நான் கொடுத்த இராஜினாமாவை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதனையும் அறிந்து கொண்டேன். எனவே ஐயா அக் கம்பனியிலிருந்து பணிக் கொடுப்பனவு பெற முடியுமா?


பதில்:− 

அன்பான சகோதரரே! உங்களது இராஜினாமாவை குறித்த நிறுவனம் ஏற்காவிடினும் தாங்கள் பிறிதொரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த அந்த நிமிடமே உங்களது இராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாகிவிடும்.
உங்களது முன்னைய தொழில்தருனரிடம் 15 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்திருப்பின் அத்துடன் உங்களது தொழிலானது பண மோசடி அல்லது சொத்துக்கு நட்டம் அல்லது தீங்கு ஏற்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக அன்றி குறித்த கம்பனி இடை நிறுத்தப்பட்டிருப்பின் உங்களது தொழில்தருனர் "1983 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க பணிக்கொடைச் சட்டத்தின்" கீழ் அந் நிறுவனத்தின் தொழிலாளர்களுக்கு பணிக்கொடை அளிப்பதிலிருந்து விலக முடியாது. நீங்கள் ஏற்கனவே உங்களது தொழிலிருந்து இராஜினாமா செய்தபடியால் உங்களது பணிக்கொடை தொடர்பில் நீங்கள் தொழில் ஆணையாளருக்கு முறைப்பாடொன்றினை மேற்கொள்ள வேண்டும். அவரது அறிக்கையின் பிரகாரம் குறித்த நிறுவன முதல்வருக்கு எதிராக வழக்கு தொடருவது பற்றி குற்றவியல் சட்டத்தரணி ஒருவரின் ஆலோசனையை பெற்று, அதற்கான நடவடிக்கையினை பெறவும்.
இன்றைய கேள்வி பதில் -24/08/2016 Reviewed by NEWMANNAR on August 24, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.