அண்மைய செய்திகள்

recent
-

இன்றைய கேள்வி பதில் (26-08-2016)

கேள்வி:−

பெரும் மதிப்பிற்குரிய சட்ட அறிஞர் சுதன் ஐயா! நான் வல்லுவர் கோட்டத்திலிருந்து வரதராஜன். ஐயா! நான் 1976-ல் பெரியோர்கள் முன்னிலையில் விதவைப் பெண்ணை திருமணம் செய்தேன். தற்போது பேரக் குழந்தைகளையும் பார்த்துவிட்டேன். அனைத்து அரசு ஆவணங்களிலும் என் மனைவியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் எனது திருமணம் பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில் என் மனைவி, அவருடைய முன்னாள் கணவன் இறப்பை காட்டி 2011-ஆம் ஆண்டில் ஒரு சொத்தை பெற்றுள்ளார். மேலும் முன்னாள் கணவனுடைய ஓய்வூதியத்தையும் பெற்று வருகிறார். இது தெரிந்தவுடன் எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் போது நம்முடைய திருமணம் பதிவு செய்யப்படவில்லை. சட்டப்படி நான் உங்கள் மனைவி இல்லை என்றும் கூறுகிறார். இவர்தான் என் மனைவி என அங்கீகாரம் பெற நீதிமன்றத்தை நாடலாமா? எங்களது குழந்தைகள் சட்டப் பூர்வ வாரிசுகளா? ஓய்வூதியம் பாதிக்கப்படுமா? இது போன்ற சந்தேகங்களுக்கு விடையளியுங்கள் ஐயா!


பதில்:−
அன்பான சகோதரரே! தமிழ் நாட்டு மாநில அரசின் சட்டத்தின் படி 1976 ஆம் ஆண்டளவில், திருமணம் பதிவு செய்வது என்பது வழக்கத்தில் இருக்கவில்லை. அதனால் அதற்கு அவசியமில்லை. எப்படியாயினும் சட்டத்தின் பார்வையில் அவர் உங்கள் "மனைவி"தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அது போல் உங்கள் குழந்தைகள், உங்களுடைய வாரிசுதான்.
இதற்காக நீதிமன்றம் சென்று தனியாக எந்த சான்றும் பெற வேண்டிய அவசியமில்லை.
உங்கள் மனைவி முன்னாள் கணவருடைய ஓய்வூதியத்தை பெற்று வருகிறார் என்று கூறியிருக்கிறீர்கள். அது உண்மையாக இருக்கும் நிலையில், நீங்கள் இதை பெரிது படுத்தும் பட்சத்தில் உங்கள் மனைவி சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளியாக நேரிடும். இனி இதை எப்படி கொண்டு செல்வது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் உங்கள் மனைவிக்கெதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் பண்ணுவீர்களாயின் உங்கள் மனைவியே குற்றவாளியாக கருதப்பட்டு, முன்னைய கணவர் சார்ப்பாக பெற்று கொண்ட அனைத்து சலுகைகளையும் இழப்பதோடு, அதற்கான நட்ட ஈட்டினையும் செலுத்த வேண்டும்.
இன்றைய கேள்வி பதில் (26-08-2016) Reviewed by NEWMANNAR on August 26, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.