அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட நில ஆக்கிரமிப்பு குறித்து நீதிமன்றத்தின் தடை உத்தரவு அவசியம் -கே.எஸ்.வசந்தகுமார்.(PHOTOS)


மன்னார் பள்ளிமுனை கடற்கரை பகுதியில் உள்ள பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட பகுதியில் கடற்படைக்காக நில அளவை செய்யப்பட இருந்த காணி தொடர்பில் எதிர் வரும் இரண்டு வார காலப் பகுதிக்குள் (14 நாற்கள்) மன்னார் நீதிமன்றத்தின் தடை உத்தரவை பெற்று குறித்த காணி அளவீட்டை நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது விட்டால் குறித்த தவணையில் நில அளவீடு செய்யப்பட்டு உரிய தரப்பிற்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மன்னார் நகர பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்த குமார் தெரிவித்துள்ளார்.


குறித்த விடையம் தொடர்பில் மன்னார் நகர பிரதேசச் சயெலாளர் கே.எஸ்.வசந்தகுமார் உரிய தரப்பினருக்கு கடந்த 24 ஆம் திகதி (24-08-2016) புதன் கிழமை அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,,

மன்னார் பள்ளிமுனை மேற்கு கிராம அலுவலகர் பிரிவில் உள்ள பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட காணியினை கடற்படையினர் சுவீகரிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக ADVANCE TRACING No:-Ma/Mnn/2013/097 நில அளவையாளரினால் வரையப்பட்டுள்ளது.

எனவே குறித்த காணியினை நில அளவை செய்து எல்லைக்கற்கள் இட்டு ppmn
வரைபடம் மேற்கொள்வதற்காக பொலிஸ் அதிகாரியின் உதவியுடன் கடந்த 23-08-2016 அன்று நில அளவையாளர்கள் நில அளவையினை முன்னெடுத்திருந்தனர்.

எனினும் பள்ளிமுனை கிராமத்தினைச் சேர்ந்த பொது மக்களின் எதிர்ப்பினால் நில அளவை மேற்கொள்வதில் இடையூறு எற்பட்டுள்ளதோடு,பொலிஸ் அதிகாரிகளும் நீதிமன்ற அனுமதியினை பெற்றுக் கொள்ளாததினால் குறித்த நில அளவை நடவடிக்கைகளுக்கு பூரண இத்துழைப்பினை வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.

குறித்த பிரச்சினை தொடர்பில் பொது மக்கள் மற்றும் மக்கள் பிரதி நிதிகளுடன் இடம் பெற்ற கலந்துரையாடலில் பின்வரும் விடையங்கள் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த காணி பிரச்சினை தொடர்பில் இரண்டு (2) வாரங்களில் தற்காலிகமாக நில அளவையினை நிறுத்தி வைத்தல், மற்றும் குறித்த இரண்டு வார காலப் பகுதிக்குள் நீதிமன்ற தடை உத்தரவினை பெற்றுத்தர வேண்டும்.

மேற்குறித்த தடை உத்தரவினை பெற்றுத்தர தவறும் பட்சத்தில் குறித்த காணி சுவீகரிப்பினை மேற்கொள்ள செய்யப்படவுள்ள நில அளவைக்கு, பொலிஸ் திணைக்களம் நீதி மன்றத்தின் உத்தரவினை பெற்று தகுந்த பாதுகாப்பினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானத்திற்கு அங்கு சமூகமளித்திருந்த மக்கள் பிரதி நிதிகள் மற்றும் சம்மந்தப்பட்ட மக்களும்,உடன் பட்டதோடு,இரண்டு வார காலத்தின் பின்னர் தடை உத்தரவு ஆவணம் வழங்கப்படாது இருப்பின் குறித்த காணி சுவீகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்பதனை அறியத்தருகின்றோம். என மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் ஒப்பமிட்டு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்,மன்னார் மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் வடமாகாண சபை உறுப்பினர்கள், நில அளவைத்திணைக்கள உயர் அதிகாரிகள்,பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உரிய கிராம அலுவலகர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட நில ஆக்கிரமிப்பு குறித்து நீதிமன்றத்தின் தடை உத்தரவு அவசியம் -கே.எஸ்.வசந்தகுமார்.(PHOTOS) Reviewed by NEWMANNAR on August 26, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.