’இதுவரை 3000 முறை பலாத்காரம் செய்யப்பட்டேன்’ துஷ்பிரயோகத்தில் இருந்து மீண்ட இளம் பெண் உருக்கம்....
பிரித்தானியாவில் 10 வயதில் இருந்தே சிறுமியை மிரட்டி தொடர்ந்து 6 ஆண்டுகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியை பல்வேறு காரணம் கூறி மிரட்டி தினசரி இருமுறை அந்த நபர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக அந்த இளம் வயது பெண் தெரிவித்துள்ளார்.
சிறுமி 10 வயதாக இருக்கும்போதே அந்த நபர் தமது கட்டுப்பட்டுக்குள் சிறுமியை கொண்டு வந்துள்ளத்காகவும் இது 16 வயது வரை தொடர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள Keith Downend என்ற நபர் தற்போது பல்வேறு குற்றவியல் பிரிவின் கீழ் 19 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
தமக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து மனம் திறந்த அந்த இளம் பெண், தமது குழந்தை பருவத்தை அந்த நபர் சூறையாடியதாக கூறிய அவர், தினசரி இருமுறை தம்மை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமது வாழ்க்கையின் முக்கிய காலகட்டம் அத்தனையும் நரகத்தில் கழிந்துள்ளதாகவே தாம் தற்போது உணர்வதாகவும், அந்த நபர் சிறையில் இருப்பதால் இனி தமது எதிர்காலம் குறித்து சிந்திக்கலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
குற்றம்சாட்டப்பட்ட நபரின் குழந்தைகளை, அவரது மனைவி வேலைக்கு செல்லும்போது பார்த்துக்கொள்ளும் பொருட்டு பாதிக்கப்பட்ட சிறுமியை முதலில் தமது வீட்டில் வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.
வேலை நிமித்தமாக அந்த நபரின் மனைவி பெரும்பாலும் வெளியே சென்று விடுவதால், அந்த வாய்ப்பை பயன்படுத்தி 10 வயதேயான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.
சில சமயங்களில் நள்ளிரவு நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் தம்மை வலுக்கட்டாயமாக எழுப்பி உறவு வைத்துக்கொள்ள நிர்பந்தித்துள்ளதாகவும், கடந்த ஆறு ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக 3000 முறை தம்மை அவர் பலாத்காரம் செய்திருப்பார் எனவும் அவர் வருத்தம் தோய்ந்த குரலில் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
தமக்கு நேர்ந்த கொடுமைகள் பலவும் வெளியே சொல்ல முடியாதது என உடைந்து அழும் அவர், அந்த நினைவுகளில் இருந்து மீண்டு புது வாழ்க்கையை துவங்க வேண்டும் என்பதே தமது குறிக்கோள் என தெரிவித்துள்ளார்.
’இதுவரை 3000 முறை பலாத்காரம் செய்யப்பட்டேன்’ துஷ்பிரயோகத்தில் இருந்து மீண்ட இளம் பெண் உருக்கம்....
Reviewed by Author
on
August 08, 2016
Rating:

No comments:
Post a Comment