மீண்டும் 41 பேருக்கு ஷீகா வைரஸ் தொற்று!
சிங்கப்பூரில் ஷீகா வைரஸ் தொற்று காரணமாக 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தொற்று காரணமாக வெளிநாட்டு கட்டிட நிர்மாண தொழிலாளர்களே பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 34 பேர் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்துள்ளதாகவும் ஏனையவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுள்ளது.
ஷீகா வைரஸ் இந்த ஆண்டில் மேற்கத்தேய நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.ஒரு வகையான நுளம்புகள் மூலமே இந்த வைரஸ் பரவுவதாகவும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷீகா வைரஸினால் பாதிக்கப்படும் கர்ப்பிணித் தாய்மார்களால் பிரசுவிக்கப்படும் சிசுக்களின் தலைகள் சிறிதடைவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் 41 பேருக்கு ஷீகா வைரஸ் தொற்று!
Reviewed by Author
on
August 29, 2016
Rating:

No comments:
Post a Comment