அண்மைய செய்திகள்

recent
-

சுவிஸில் வாழும் வெளிநாட்டவர்கள் எத்தனை கோடி: வெளியான புது தகவல்!


சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்களின் மொத்த எண்ணிக்கை அடங்கிய புள்ளி விவர தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் ஒட்டு மொத்தமாக 20 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் குடியிருந்து வருவதாக புதிய தகவல் ஒன்று முதன் முறையாக வெளியாகியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள்படி 20 லட்சத்து 48 ஆயிரம் வெளிநாட்டவர்கள் நிரந்தர வசிப்பிட அனுமதி பெற்று வாழ்ந்து வருகின்றனர். இது மொத்த மக்கள் தொகையில் 24.6 சதவிகிதம் என கருதப்படுகிறது.

இந்த பட்டியலில் சுவிஸில் பிறந்தும் குடியுரிமை இல்லாத 3 லட்சத்து 93 ஆயிரம் பேரும் அடங்குவர்.

சுவிஸ் நாட்டிற்கு வெளியே பிறந்தவர்கள் 44 சதவிகிதம் பேர் பத்தாண்டுகளுக்கு மேலாக இங்கு குடியிருந்து வருகின்றனர்.

இதில் பெரும்பாலும் இத்தாலியர்கள், ஜேர்மானியர்கள், போர்த்துகியர்கள், பிரஞ்சு நாட்டவர்கள் ஆகியோர்கள் நிரந்தமாக வசித்து வருகின்றனர்.

ஜெனீவா மாகாணத்தில் மட்டும் 41 சதவிகித வெளிநாட்டவர்கள் வசித்து வருகின்றனர். இதற்கு அடுத்தபடியாக பேசல் நகரில் 35 சதவிகிதத்தினரும், வாட் மாகாணத்தில் 34 சதவிகிதத்தினரும் குடியிருந்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு மட்டும் 2.1 சதவிகித வெளிநாட்டவர்கள் சுவிஸ் குடியுரிமை பெற்றுள்ளனர். இதில் ஜெனீவா மாகாணத்தில் மட்டும் 3.6 சதவிகிதம் பேர் பெற்றுள்ளனர்.

மொத்த மக்கள் தொகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு மட்டும் 1.1 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கூறும் இந்த அறிக்கை, இது கடந்த 2 ஆண்டுகளை விட குறைவு எனவும் தெரிவித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு மக்கள் தொகை 1.3 சதவிகித வளர்ச்சி இருந்தது எனவும், 2014 ஆம் ஆண்டு அது 1.2 சதவிகிதம் எனவும் கூறப்படுகிறது.

2015 ஆம் ஆண்டு மட்டும் சுவிட்சர்லாந்தில் 86,600 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் 67,600 இறப்பும் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜெனீவா, வாட், மற்றும் ஸுக் ஆகிய மாகாணங்கள் சராசரியைவிடவும் குறிப்பிடத்தக்க வகையில் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில் உரி மாகாணம் மட்டும் மக்கள் தொகை எண்ணிக்கையின் அளவு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சுவிஸில் வாழும் வெளிநாட்டவர்கள் எத்தனை கோடி: வெளியான புது தகவல்! Reviewed by Author on August 27, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.