இன்று தரம் 5 புலமைப்பரீட்சை எழுதும் 3 இலட்சத்து 50 ஆயிரத்து 701 மாணவமாணவிகளுக்கும் வாழ்த்தி நிற்கின்றோம்
2016 இவ்வருடத்துக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
நாடெங்கிலும் உள்ள 2,959 பரீட்சை மத்திய நிலையங்களில் 3 இலட்சத்து 50 ஆயிரத்து 701 பரீட்சார்த்திகள் இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர் என்று பரீட்சைகள் ஆணையாளர் என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும் இந்தப் பரீட்சையின் முதல் வினாத்தாள்களுக்கான விடையளிக்கும் நேரம் காலை 10.15 மணிக்கு முடிவடையும் எனவும், இரண்டாவது வினாத்தாளுக்கான விடையளிக்கும் நேரம் காலை 10.45 மணிக்குத் தொடங்கி நண்பகல் 12 மணிக்கு முடிவடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சார்த்திகள் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு காலை 9 மணிக்கு முன்னரே சமுகமளிக்கவேண்டும் எனவும், பரீட்சை முடியும்வரை பரீட்சார்த்திகளின் பெற்றோர் பாடசாலை வளவுக்குள் பிரவேசிப்பதற்கோ தரப்படும் அரை மணித்தியால இடைவேளையின்போது பிள்ளைகளைச் சந்திக்கவோ அனுமதி கிடையாது எனவும், பரீட்சை நடக்கும்போது அமைதியைக் குலைக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் முற்றாகத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது எனவும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
நன்கு வாசியுங்கள்
நல்லாய் எழுதுங்கள்
பயம் வேண்டாம்
ஜெயம் தான்
இன்று புலமை பரீட்சை எழுதும் அனைத்து மாணவமாணவிகளுக்கும் சித்தியடைய நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம்.
இன்று தரம் 5 புலமைப்பரீட்சை எழுதும் 3 இலட்சத்து 50 ஆயிரத்து 701 மாணவமாணவிகளுக்கும் வாழ்த்தி நிற்கின்றோம்
Reviewed by Author
on
August 21, 2016
Rating:

No comments:
Post a Comment