அண்மைய செய்திகள்

recent
-

உலகின் மிகப்பெரிய விமானம்! வெற்றிகரமாக முதல் பயணத்தை முடித்தது.


உலகின் மிகப்பெரிய விமானமான Airlander 10 முதல் பயணத்தை வெற்றிகரமாக முடித்து அசத்தியுள்ளது.

Hybrid Air Vehicles எனும் நிறுவனம் 35.6 மில்லியன் டொலர் செலவில் உருவாக்கியுள்ள Airlander 10, 302 அடி நீளமும், 143 அடி அகலமும், 85 அடி உயரமும் கொண்டது.

விமானம், ஹெலிகொப்டர் மற்றும் விண்கலம் என மூன்றையும் கலந்து செய்த கலவையான Airlander 10, நேற்று மாலை Bedfordshire உள்ள Cardington விமானத்தளத்திலிருந்து முதல் பயணத்தை தொடங்கியது.

உலகின் பெரிய விமானம் வானில் பறப்பதை காண, புகைப்படக்காரர்களும், மக்களும் விமான தளத்தில் குவிந்தனர். மேலும் கைதட்டி ஆரவாரம் செய்து முதல் பயணத்தை ஊக்குவித்தனர்.

பிரித்தானியா நிறுவனம் மேற்கொண்ட பல சீரமைப்பிற்கு பின்னர், வெற்றிகரமாக வானில் பறந்த Airlander 10, தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது.

எச்.ஏ.வி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Stephen McGlennan பேசுகையில், இது ஒரு ராட்சத ஹெலிகொப்டர், ஒரு ஹெலிகொப்டர் செய்வதை Airlander 10 செய்து விடும்.

ஹீலியம் எனப்படும் வாயுவைக் கொண்டு மாசுபடுத்தாமல் இயங்கும் இந்த விமானம், ராணுவ உபகரணங்களை மிகவும் தொலைவான பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதற்கும், கண்காணிப்புக்கும், ஆடம்பர பயணங்களுக்கும் ஏற்றது என குறிப்பிட்டுள்ளார்.

உலகின் மிகப்பெரிய விமானம்! வெற்றிகரமாக முதல் பயணத்தை முடித்தது. Reviewed by Author on August 21, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.