அண்மைய செய்திகள்

recent
-

புத்தகம் எழுதியதால் 50 கோடி ரூபாய் இழந்த கடற்படை அதிகாரி....


அமெரிக்க கடற்படை அதிகாரி ஒருவர் பின்லேடன் கொல்லப்பட்டதை புத்தகமாக எழுதி வெளியிட்டதால், நீதித்துறைக்கு இழப்பீடு தொகையாக 50 கோடி ரூபாய் செலுத்துவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

பாகிஸ்தானில் தங்கியிருந்த அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவரான ஒசாமாபின்லேடனை அமெரிக்க கடற்படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.

ஆனால் அவர் எப்படி கொல்லப்பட்டார் என்ற அதிகார தகவல்கள் இன்னும் சரிவர வெளிவரவில்லை.

இந்நிலையில் பின்லேடனை சுட்டு கொலை செய்த ஆப்ரேசனில் பங்கேற்ற கடற்படை உயர் அதிகாரி மேத்யூ பிசானட், பின்லேடன் எவ்வாறு கொலை செய்யப்பட்டார், அங்கு என்ன நடந்தது என்பது பற்றி அவர் எழுதிய எளிதான நாள் இல்லை என்ற புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆனால் அவர் தான் புத்தகம் எழுதியதற்கு அமெரிக்க இராணுவ தலைமையகத்திடம் (பெண்டகன்) சமர்ப்பிக்கவில்லை. பாதுகாப்பு ஆய்வு தொடர்பான கருத்துக்களும் பெறவில்லை.

இதனால் விதிமுறைகளை மீறிய காரணத்தினால் நீதித்துறை சார்பில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அவரோ சட்டபிரச்னையை தீர்க்க நீதித்துறைக்கு இழப்பீடு தொகையாக 50 கோடி ரூபாய் தருவதாகவும், புத்தக பதிப்பு மற்றும் விற்பனை தொடர்பான அனைத்து வருவாய்களையும் தருவதாக ஒப்புக்கொண்டார் என நீதித்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

மேலும் மேத்யூ பிசானட் தேசிய பொது ரேடியாவில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தகம் எழுதியதால் 50 கோடி ரூபாய் இழந்த கடற்படை அதிகாரி.... Reviewed by Author on August 21, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.