அண்மைய செய்திகள்

  
-

தனியார் ஊடகங்களை முடக்கும் புதிய அமைச்சரவை பத்திரம்.....


அரசின் உத்தியோகப்பூர்வ தகவல்களை தெரிவிப்பதற்காக தேசிய ஊடக மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இதற்கான யோசனை முன்வைக்கப்பட்டதாகவும் இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

The new cabinet memorandum to disable the private media

அரச சார்பற்ற பல ஊடகங்கள் செய்திகளை உறுதிப்படுத்தியும், உறுதிப்படுத்தாமலும் பிரசுரிப்பதாகவும், இதற்கு தீர்வு காணும் நோக்கிலேயே இந்த தேசிய ஊடக மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், அரசு தொடர்பான செய்திகளை மக்களுக்கு உரிய முறையில் கொண்டு போய் சேர்ப்பதற்காகவே இந்த நிலையம் அமைக்க உள்ளதாகவும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.


தனியார் ஊடகங்களை முடக்கும் புதிய அமைச்சரவை பத்திரம்..... Reviewed by Author on August 24, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.