அண்மைய செய்திகள்

recent
-

குமார் சங்கக்கார கடவுளுக்கு சமமானவர் - இங்கிலாந்து வீரரின் கருத்து.....


இங்கிலாந்தைச் சேர்ந்த சர்வே அணி கிரிக்கட் வீரரான ஸ்டுவட் மேக்கர், இலங்கை கிரிக்கட் அணியின் வீரரான குமார் சங்கக்காரவை கடவுளுக்கு சமமானவர் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை ஆகஸ்ட் 18அம் திகதி ஸ்டுவட் மேக்கர் தனது டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இங்கிலாந்தில் இடம் பெற்ற ரோயல் லண்டன் ஒரு நாள் போட்டியில் சர்வே அணிக்கும் Northam ptonshire அணிக்கும் இடையில் போட்டி ஒன்று இடம் பெற்றுள்ளது.

இதன் போது ஒரு விக்கட் இருக்க, சங்கக்கார இறுதிப் பந்தை மிகவும் சூட்சுமமான முறையில் எதிர்கொண்டு சர்வே அணிக்கு வெற்றியை சுவீகரித்துக் கொடுத்தார்.

இந்த வெற்றியின் காரணமாகவே இவரை கடவுளுக்கு சமமானவர் என ஸ்டுவட் மேக்கர் தகவல் வெளியிட்டுள்ளார்.

போட்டியில் சங்கக்கார ஆட்டம் இழக்காமல் 130 ஓட்டங்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



குமார் சங்கக்கார கடவுளுக்கு சமமானவர் - இங்கிலாந்து வீரரின் கருத்து..... Reviewed by Author on August 24, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.