அண்மைய செய்திகள்

recent
-

இந்தியாவுடன் பாலம் அமைத்து தேசத்துரோகியாக மாட்டேன்;மைத்திரி

இந்தியாவையும் ஸ்ரீலங்காவையும் இணைக்கும் வகையில் தலை மன்னாரிலிருந்து பாலமொன்று அமைப்பது தொடர்பாக இருநாட்டு அரசாங்கங்களும் எந்தவிதமான கலந்துரையாடலையும் நடாத்தவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்தகையதொரு தேசத்துரோகமான நடவடிக்கையை அரசாங்கம் ஒருபோதும் செய்யாது என்பதுடன், அரசாங்கத்தை அசௌகரியத்திற்குள்ளாக்கும் இத்தகைய கூற்றுக்களை தாம் முற்றாக நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.



கனேலந்தை ரஜமகா விகாரையின் அதிபதி சத்தர்ம கீர்த்தி ஸ்ரீ தம்ம தஸ்ஸி தேரரின் 75வது பிறந்த தினத்தை முன்னிட்டு விகாரையில் புத்தர் சிலையை சூழ புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தங்க வேலியை திறந்துவைத்தல், விகாரை வளாகத்தில் மின் ஒளி முறைமையை திறந்துவைத்தல் ஆகிய நிகழ்வுகள் ஜனாதிபதியின் தலைமையில் நேற்று நடைபெற்றது.

தலவதுகொடை கனேலந்தை விகாரையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

தென் இந்தியாவில் நடைபெற்ற ஒரு மானிலத் தேர்தலின் போது ஒரு தென்னிந்திய அரசியல்வாதி தனது தேர்தல் பிரசாரத்திற்காகவும் இந்திய லோக்சபாவில் ஒரு தென்னிந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் முன்வைத்த இந்தக் கூற்றில் எவ்வித உண்மைகளும் இல்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, அத்தகைய கூற்றுக்களினால் எமது நாட்டு மக்களை பிழையாக வழிநடாத்த சிலர் முற்படுவதாகவும் தெரிவித்தார்.

அரசியல் அமைப்பில் உள்ள பௌத்த சமயம் தொடர்பான பகுதியை நீக்கிவிட்டு இந்நாட்டை ஒரு மதசார்பற்ற நாடாக அரசியல் யாப்பில் உள்ளடக்க புதிய அரசாங்கம் முயற்சித்து வருவதாக குறுகிய அரசியல் நோக்கங்களைக் கொண்ட அடிப்படைவாதிகள் கொண்டு செல்லும் போலியான பிரசாரங்களையும் தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.

தேசிய அபிவிருத்தியின் போதும் சர்வதேச ரீதியாகவும் எமக்கு உலகிற்கு வழங்கக்கூடிய உன்னத பங்களிப்பு பௌத்தத் தத்துவமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சர்வதேச ரீதியாக தேரவாத பௌத்த சமயத்தை பிரசாரம் செய்யும் மத்திய நிலையமாக ஸ்ரீலங்காவைப் மாற்றி உயர் தொழிநுட்ப உலகுடனும் வர்த்தக சமூகத்துடனும் பின்னடைந்துசெல்லும் சமூகத்தை சீர்படுத்தும் பொறுப்பை நிறைவேற்றுவதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவுடன் பாலம் அமைத்து தேசத்துரோகியாக மாட்டேன்;மைத்திரி Reviewed by NEWMANNAR on August 11, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.