மன்னார்– சன்னார் இராணுவ முகாமில் தொடரும் கனரக ஆயுதப் பயிற்சியால் கருச்சிதைவு அபாயம்
இதனால்ச ன்னார் பிரதேசத்தில் மக்கள் குடியிருப்புக்களுக்கு அருகில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றுமாறு அரசாங்கத்திடமும்வ, இராணுவத்திடமும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் சாள்ஸ் நிர்மலநாதன் கூறுகின்றார்.
சன்னார் கிராமத்தில் அமைந்துள்ள விடத்தல்தீவு கமண்டோ படையணியின் சிறப்பு போர்ப் பயிற்சி கலாசலையொன்று அமைந்துள்ளது. இங்கு விசேட அதிரடிப்படையினருக்கு விசேட போர்ப் பயிற்சிகள் வழங்கப்பட்டுவருவதுடன் ஆட்டிலரி உட்பட கனரக ஆயுதப் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனால் மாந்தை பிரதேச சபைக்கு உட்பட்ட சன்னார் மற்றும் அயல் கிராமமான ஈச்சளவத்தை ஆகிய கிராம மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக சுமார் 15 கர்ப்பிணத் தாய்மார்களின் கருக்கள் சிதைவுற்றுள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 17 ஆம் திகதி திறக்கப்பட்டுள்ள இந்த விசேட கமாண்டோ போர்ப் பயிற்சி கலாசாலையில் இடம்பெறும் கனரக ஆயுதப் பயிற்சியால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து மாந்தை பிரதேச செயலகத்தில் கடந்த மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்கான பொறிமுறைகள் தொடர்பான மக்கள் கருத்தறியும் செயலணியடமும் மக்கள் முறையிட்டனர்.
இந்த செயலணியில் முன்னிலையாகிய சன்னார் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மக்கள் குடியிருப்புக்களுக்கு அருகில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இடம்பெறும் கனரக ஆயுதப் பயிற்சியினால் 15 கர்ப்பிணித் தாய்மாரின் கருக்கள் கலைந்துவிட்டதாகவும்முறையிட்டிருந்தார்.
இந்த நிலையில் சன்னார், ஈச்சளவத்தை கிராம மக்களால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தான் நேரடியாக சென்று பார்வையிட்டதாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவிக்கின்றார்.
மன்னார்– சன்னார் இராணுவ முகாமில் தொடரும் கனரக ஆயுதப் பயிற்சியால் கருச்சிதைவு அபாயம்
Reviewed by NEWMANNAR
on
August 11, 2016
Rating:
No comments:
Post a Comment