அண்மைய செய்திகள்

recent
-

இன்றைய (03-08-2016) கேள்வி பதில்


கேள்வி:−

மதிப்பிற்குரிய சட்டத்தரணி சுதன் sir! என் பெயரை குறிப்பிட விரும்பவில்லை.si எனது அப்பாவிற்கு இரண்டு மனைவிகள். எனது அம்மாவினை திருமணம் முடித்து ஐந்து வருடங்களின் பின் சித்தியினை கலியாணம் கட்டினார்.எனக்கு ஒரு தங்கையும் சித்திக்கும் ஒரு பெண்பிள்ளையும் இருக்கு.எனது அப்பாவினை சித்தி விஷம் வைத்து கொலை செய்துவிட்டார். அந்த வழக்கு நான்கு வருடமாக நடைபெறுகிறது. அப்பாவிற்கு நாங்கள் இருக்கும் வீடு இருக்கு. ஆனால் அம்மாவின் பெயரில் இன்னும் எழுதப்படவில்லை. சித்தியும் அதற்கு உரிமை கோருகிறார். அப்பாவின் சொத்து யாருக்கு போகும்?அம்மாவுக்கு வாரதுக்கு என்ன பண்ண வேண்டும் என்று சுதன் லோவிடம் கேட்டு எனக்கு முடிவினை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பதில்:-

அன்பான சகோதரரே! உங்களுடைய தந்தை உங்களது சிறிய தாயினை(சித்தி)சட்ட ரீதியிலா திருமணம் செய்தாரா? என்பது எமக்கு தெரியாது. சட்ட ரீதியில் திருமணம் செய்யாவிடின் தங்களது தாய்க்கே அச் சொத்து முழு உரித்தாகும். ஆனால் சட்டப்படி தங்களது சித்தியினை திருமணம் முடித்திருந்தால் சொத்து சமமாக பிரிக்கப்பட்டு இரு பெண் பிள்ளைகளுக்கும் வழங்கப்படும். தங்களது தந்தையின் கொலை வழக்கு நடைபெறும்போது வழக்கு பற்றி எதுவும் முடிவெடுக்க முடியாது. சித்தி கொலை செய்தார் என்று நீதிமன்றில் தீர்ப்பு வழங்கப்பட்டாலும் தண்டனை சித்திக்கு கிடைக்குமே தவிர சித்தியின் மகளுக்கு(உங்கள் தங்கை)கிடைக்காது. உங்களது தங்கையும் வாழத்தானே வேண்டும். ஆகவே சொத்தினை நீங்கள் மட்டும் உரிமை கொண்டாட முடியாது. தாங்கள் நான்கு வருடமாக வழக்கினை எதிர் கொள்கிறீர்கள். அதனால் நிறைய செலவு ஏற்பட்டிருக்கும். ஆகவே மீண்டும் சொத்துக்காக வழக்காடி பணத்தினை வீணாக்காது சமரசமாக இரு தங்கைக்கும் சமமாக பிரித்து கொடுங்கள். உங்களது சித்தியின் மகள் தங்களுக்கு தங்கை. அந்த உறவினை மனதில் நிறுத்தி இரு தங்கைகளையும் சமமாக நடத்துங்கள்.


குறிப்பு

உங்கள் சட்டப் பிரச்சனை தொடக்கம், மன உளைச்சல் ,உளவியல் வரையிலான தங்களுடைய சந்தேகங்களை எமக்கு மின்னஞ்சலுயூடாக அனுப்பி வைக்க முடியும்.

அதற்கு வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான திரு.சுதன் ( SuthanLaw ) தங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்.

கேள்விகளை எமக்கு அனுப்பிவைக்க வேண்டய மின்னஞ்சல் முகவரி
newmannar@gmail.com அனுப்பும் போது "கேள்வி-பதில்" என குறிப்பிட்டு அனுப்பவும் .
இன்றைய (03-08-2016) கேள்வி பதில் Reviewed by NEWMANNAR on August 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.