நாங்கள் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்! சுவாரசியமான உண்மை சம்பவம்.....
பிரித்தானியாவை சேர்ந்த தம்பதியினர் Angela and Daniel, இவர்களுக்கு கடந்த 2012ம் ஆண்டு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது, இவர்களுக்கு Rosie and Ruby என பெயரிட்டனர்.
இருவரும் வயிற்று பகுதியில் ஒட்டிப் பிறந்தனர், Angela நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கும் போதே ஸ்கேன் பரிசோதனையில் குழந்தைகள் ஒட்டி உருவாவது தெரியவந்துள்ளது.
எனினும் கருவை சுமந்து குழந்தைகளை பெற்றெடுக்க தயாரானார் Angela, தன்னுடைய குழந்தைகள் சந்தோஷமாக வாழ்வார்கள் என்ற நம்பிக்கை.
குழந்தை பிறந்தவுடன் அறுவை சிகிச்சை செய்து பிரித்தெடுக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த Angela-வின் கனவும் நனவானது.
நான்கு மணிநேர அறுவைசிகிச்சைக்கு பின்னர், குழந்தைகள் வெற்றிகரமாக பிரித்தெடுக்கப்பட்டனர்.
தற்போது நான்கு ஆண்டுகள் கழிந்த நிலையில், இருவரும் பள்ளி செல்ல தயாராகிவிட்டனர்.
இருவரும் ஒருவர் மீது ஒருவர் அளவு கடந்த அன்பு வைத்துள்ளதாகவும், தன்னுடைய குழந்தைகளை நினைத்துப் பெருமைப்படுவதாகவும் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார் Angela.
அதுமட்டுமல்லாது மக்களின் மனதையும் கொள்ளை கொண்டுள்ளனர் குட்டி இளவரசிகள் Rosie and Ruby.
நாங்கள் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்! சுவாரசியமான உண்மை சம்பவம்.....
Reviewed by Author
on
August 30, 2016
Rating:

No comments:
Post a Comment