தீவிரவாத தாக்குதலை எதிர்கொண்டுள்ள நாடுகள் எவை? வெளியான அதிர்ச்சி பட்டியல்.....
சர்வேதச அளவில் அல்-கொய்தா, ஐ.எஸ் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளால் எந்த நேரத்திலும் தாக்குதலை அச்சத்துடன் எதிர்கொண்டுள்ள நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
2015 மற்றும் 2016 வரை பிரான்ஸ், ஜேர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.
எனினும், இந்த நாடுகளை விட தற்போது வேறு சில நாடுகளும் தீவிரவாத தாக்குதலை அச்சத்துடன் எதிர்க்கொண்டுள்ளன.
Global Terrorism Index என்ற இணையத்தளம் அண்மையில் ஆய்வு மேற்கொண்டு தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள முதல் 50 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகளின் பட்டியல் விவரம்
ஈராக் (10 சதவிகித அச்சுறுத்தல்)
ஆப்கானிஸ்தான் (9.23)
நைஜீரியா (9.21)
பாகிஸ்தான் (9.07)
சிரியா (8.11)
இந்தியா (7.75)
ஏமன் (7.64)
சோமாலியா (7.60)
லிபியா (7.29)
தாய்லாந்து (7.28)
இதே பட்டியலில் பிரித்தானியா – 28, அமெரிக்கா – 35, பிரான்ஸ் – 36, இலங்கை – 42 ஆகிய இடங்களில் உள்ளன.
தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் அதிகமாக உள்ள 50 நாடுகளின் பட்டியலில் கடைசி இடத்தில் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோபியா உள்ளது குறிப்பிடத்தக்கது.
தீவிரவாத தாக்குதலை எதிர்கொண்டுள்ள நாடுகள் எவை? வெளியான அதிர்ச்சி பட்டியல்.....
Reviewed by Author
on
August 08, 2016
Rating:

No comments:
Post a Comment