அண்மைய செய்திகள்

recent
-

போரைப் பயன்படுத்தி கொலைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் விசாரணை அவசியம்!


போரை ஓர் காரணியாக பயன்படுத்தி அரசியல் கொலைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டுமென பிரஜைகள் அமைப்புக்களின் ஒன்றிய அழைப்பாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்>

போரைப் பயன்படுத்திக் கொண்டு கொலைகள் இடம்பெற்றிருந்தால் அது குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.காணாமல் போனவர்கள் குறித்த ஆணைக்குழு இதற்கு பொருத்தமானதாகும்.

போரின் போது இடம்பெற்ற குற்றச் செயல்கள் இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டது என்பதனை புரிந்து கொண்டு அவற்றை திருத்திக் கொள்ளும் வகையில் எதிர்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

எனினும் போரை ஒர் கருவியாக பயன்படுத்தி அரசியல் கொலைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

நாம் சர்வதேச நன்மதிப்பை பெற்றுக்கொண்டிருப்பதனால் அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் செயற்பட வேண்டியது அவசியமானதாகும்.

சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் 157 மில்லியன் ரூபா பணம் அரசுடமையாக்கப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது.

இது மட்டுமன்றி நாட்டில் இடம்பெற்ற பாரியளவிலான மோசடிகள் ஊழல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

போரைப் பயன்படுத்தி கொலைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் விசாரணை அவசியம்! Reviewed by Author on August 12, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.