அண்மைய செய்திகள்

recent
-

நடுநடுங்க வைக்கும் உண்மை! இப்படியும் ஓர் கொடூரமா?


கதைகளையே வெல்லும் அளவிற்கு நிஜத்திலே அச்சுறுத்தலான விஷயங்களை சமயங்களில் சந்திக்கிறோம். மக்களை பயத்தில் நடுங்க வைத்த சில கொடூர கொலையாளிகளை, வரலாறு காலம் கடந்தும் நினைவில் வைத்துள்ளது.

Vlad The Impaler

15 ம் நூற்றாண்டில் வல்லாச்சியாவின் (இப்போது ருமேனியா பகுதி) ஒரு ஆட்சியாளன் இந்த வலத்.

வலத்தின் பிறந்த இடம் ட்ரான்ஸில்வேனியா, கொடூரமாக கொலைசெய்யும் விதத்திலே இம்பலெர் (துளையிட்டு கொல்பவன்) பெயரோடு சேர்ந்தது.

கைகால்களை துண்டாக வெட்டி கொல்வது, போரில் எதிரிகளையும் தன்னாட்டு மக்களையும் அதிக அளவில், பெரிய காரணங்கள் இல்லாமலே பொழுதுபோக்காக கொன்று குவிப்பது.

கழுமரத்தில் ஏற்றி துளைத்து கொள்வது, குற்றுயிரோடு கிடப்பவரை மரம் துளைக்கும் கருவியால் துளையிடுவது. தோலை உரிப்பது, கொதிக்கும் நீரில் போட்டு வேக வைத்து ரசிப்பது என இவன் கொலை செய்யும் முறைகள் பல.

கற்பனை நரகத்தில் மதங்கள் போதிக்கும் கோர தண்டனைகளை நிஜத்திலே நிறைவேற்றி பார்த்த காட்டுமிராண்டி, கல்நெஞ்சன் இந்த வலத்.

ஆனாலும், வாழும்போது அவனை முரட்டுத்தனமான ராணுவத்தினர் உட்பட பலர் ஒரு சிறந்த நாயகன் போல வர்ணித்தனர். எதிரிகள் பயப்படுவதை வைத்தும் தங்களுடைய பயத்தாலும் அப்படி புகழ்ந்தனர்.


வீரன் அல்ல வெறியன்

ஓட்டோமான், துருக்கியர்களுக்கு எதிரான போரில் வலத் வென்றான். தன்யூப் நதியின் கரையில், தோல்வியடைந்த 20,000 வீரர்களை சித்ரவதை செய்து, உடலை துளைத்து காட்டில் எதிரிப்படைகள் வரும் வழியில் பார்த்தாலே மனம் பதபதைக்குமாறு போட்டிருந்தான். அதைப்பார்த்த இரண்டாவதாக வந்த எதிரிகள் படை அலறியடித்து பின்வாங்கி ஓடிவிட்டது.

அப்படி சிதைந்து கிடக்கும் ஆயிரக்கணக்கான உடல்களுக்கு மத்தியில் அமர்ந்து ரசித்து சாப்பிடுவான். ரொட்டியை உடலின் துளையிட்ட பாகத்தில் முக்கி, ரத்தத்தில் தோய்த்து சாப்பிடுவான்.

கொலைவாளை முழுநேரமும் பிடிப்பவன் கையில் செங்கோலை கொடுத்துவிட்டு மக்கள் பேச்சு மூச்சு இல்லாமல் தவித்துள்ளனர்.

‘வலத் 3ம் டிராகுலா’, ’வலத் குத்திக்கொல்லன்’ என்ற அடைமொழிகளால் அவர் இன்னும் அழைக்கப்படுகிறார்.

மனநிலை பாதிக்கப்பட்ட இந்த ரத்தகாட்டேரியின் தாக்கத்தை வைத்துதான் ப்ராம் ஸ்டாக்கர் 1897 ல் “டிராகுலா” என்ற புகழான நாவலை எழுதினார்.

பின்னாளில் அது படமாகவும் எடுக்கப்பட்டது. ஒரு புதிய முயற்சியாக நாவலும் படமும் உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதை ஒரு கற்பனை கதை என்றே அனைவரும் ரசித்தனர். ஆனாலும் அந்த கதைக்குப் பின்னால் இப்படி ஒரு ஜீவன் வாழ்ந்திருப்பது ஆச்சரியப்படுத்துகிறது. அந்த கற்பனை கதையை விடவும் அச்சப்படுத்துகிறது.



நடுநடுங்க வைக்கும் உண்மை! இப்படியும் ஓர் கொடூரமா? Reviewed by Author on August 31, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.