அண்மைய செய்திகள்

recent
-

நிர்வாண மார்பகங்களே பிரான்ஸ் குடியரசின் சுதந்திரத்திற்கான சின்னம்: பிரதமர் மனுவல் வால்ஸ்!


நிர்வாண மார்பகங்களே பிரான்ஸ் குடியரசின் சுதந்திரத்திற்கான சின்னம் என அந்நாட்டின் பிரதமர் மனுவல் வால்ஸ் தெரிவித்த கருத்தால் நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரான்சில் புர்கினிக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, உடையில்லாத மார்பகங்களே பிரான்ஸின் சிறந்த பிரநிதித்துவம். பிரான்சின் குடியரசின் தேசிய சின்னமாக திகழும் திறந்த மார்புடன் இருக்கும் Marianne சிலையே சுதந்திரத்திற்கான அடையாளம். அதுவே பெண்கள் உரிமைக்கான அடையாளம் என தெரிவித்துள்ளார்.

Marianne மக்களை வளர்த்ததால் திறந்த மார்புடன் இருக்கிறார். அவர் தலை மறைக்கபடவில்லை, ஏனெனில் அவர் கட்டுப்பாடு இன்றி சுதந்திரமாக இருந்தார். அது தான் சுதந்திரம்! அது தான் Marianne என தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களுக்கு எதிராக மனுவல் வால்ஸ் தெரிவித்துள்ள கருத்து நாட்டில் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாரிஸ் பல்கலைக்கழக பேராசிரியர் Mathilde Larrère கூறியதாவது, Marianne சிலையானது 1830ல் உருவாக்கப்பட்ட சிலையாகும். பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டு, வாக்குரிமை இல்லாத காலத்தில் உருவாக்கப்பட்ட சிலை என அவர் குறிப்பிட்டுள்ளார்.



நிர்வாண மார்பகங்களே பிரான்ஸ் குடியரசின் சுதந்திரத்திற்கான சின்னம்: பிரதமர் மனுவல் வால்ஸ்! Reviewed by Author on August 31, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.