அண்மைய செய்திகள்

recent
-

கனடா கடல் எல்லையை கடந்து ஒரு குடும்பத்தை காப்பாற்றிய அமெரிக்க படை வீரர்கள்!


அமெரிக்க கடலோர பாதுகாப்பு படையினர் கனடாவில் தீயினால் பாதிக்கப்பட்ட ஒரு வீட்டில் இருந்து ஒரு குடும்பத்தை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியுயார்க்கை சேர்ந்த அமெரிக்க கடலோர பாதுகாப்பு படையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது நயாகரா அருவியின் அருகில் உள்ள கடலோரப் பகுதியில் ஒரு வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

அப்போது அந்தப் பகுதியில் தீயணைப்பு வீரர்களோ அல்லது உதவி செய்யவோ யாரும் இல்லாததை அறிந்த பாதுகாப்பு படையினர் சற்றும் தயங்காமல் எச்சரிக்கை அலாரத்தை ஒலித்தபடி கரையை அடைந்தனர்.

பின்னர் விரைந்து சென்ற அவர்கள் அந்த வீட்டில் இருந்த 2 குழந்தைகள் உட்பட 4 பேரை மீட்டு வெளியே கொண்டுவந்தனர்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை வழிதவறி Sarniaன் கடற்பகுதிக்கு வந்த 1500 அமெரிக்கர்களுக்கு கனடா அடைக்கலம் கொடுத்தது.

இந்த நிலையில் அமெரிக்க கடலோர பாதுகாப்பு படையினரின் இந்த செயல் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நியுயார்க்கில் உள்ள Buffalo நகரின் துணை ரோந்து அதிகாரியான Matt Harvey கூறுகையில், அமெரிக்க கடலோர பாதுகாப்பு படையினரின் இந்த செயல் எல்லையின் இருபுறத்திலும் உள்ள குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

கனடா கடல் எல்லையை கடந்து ஒரு குடும்பத்தை காப்பாற்றிய அமெரிக்க படை வீரர்கள்! Reviewed by Author on August 26, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.