தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக ஜெனீவாவில் முறைப்பாடு!
வட மாகாணத்தில் புத்தர் சிலைகளை அகற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்யப்பட உள்ளது.
இலங்கையில் மத வழிபாடுகளை மேற்கொள்ளவதற்கான உரிமையை மீறும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கிலிருந்து புத்தர் சிலைகளை அகற்ற முயற்சிக்கப்படுகின்றது.
இது குறித்து கவனம் செலுத்துமாறு வெளிநாடு வாழ் பத்து இலங்கை அமைப்புக்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளார் செயிட் ராட் அல் ஹூசைனிடம் முறைப்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் நல்லிணக்க பொறிமுறைமையை மீறும் வகையில் அமைந்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவை அமர்வுகளின் போது இந்த விடயம் பற்றி முறைப்பாடு செய்யப்பட உள்ளது.
இலங்கை அரசியல் அமைப்பில் மத வழிபாட்டு சுதந்திரம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில தரப்பினர் வடக்கில் புத்தர் சிலைகளை அகற்றுவதற்கு முயற்சிக்கின்றனர்.
இது சட்டவிரோதமானதாகும் இதற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜெனீவாவில் முறைப்பாடு செய்ய உள்ளதாக வெளிநாடுகளைச் சேர்ந்த புலம்பெயர் இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக ஜெனீவாவில் முறைப்பாடு!
Reviewed by Author
on
August 27, 2016
Rating:

No comments:
Post a Comment