அரசாங்கம் மீது கூட்டமைப்பு குற்றச்சாட்டு!
போரின் போது கணவர்மாரை இழந்த தமிழ்ப்பெண்களுக்கான எந்தவொரு நிவாரணத் திட்டத்தையும் இலங்கை அரசாங்கம் இதுவரை அறிவிக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மதுரையில் நேற்று நடைபெற்ற கலாசார நிகழ்வு ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ல்ஸ் நிர்மலநாதன், சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுக்குமாரும் பங்கேற்றதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் மீது கூட்டமைப்பு குற்றச்சாட்டு!
Reviewed by Author
on
August 20, 2016
Rating:

No comments:
Post a Comment