யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மூவருக்கு நீதிமன்றம் அழைப்பாணை!
யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற மோதல் நிலைமை தொடர்பாக அங்கு கல்வி பயிலும் மாணவர்கள் மூவருக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 25ஆம் திகதி குறித்த மூவரையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் இன்று உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த மாணவர்கள் மூவரும் கலை, முகாமைத்துவம் மற்றும் வர்த்தக பீடங்களைச் சேர்ந்தவர்கள் என்று யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவ சங்க தலைவர் என்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மூவருக்கு நீதிமன்றம் அழைப்பாணை!
Reviewed by Author
on
August 20, 2016
Rating:

No comments:
Post a Comment