அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானியாவில் கடலில் மூழ்கி உயிரிழந்த ஈழத்து இளைஞர்களின் விபரங்கள் - இருவர் சகோதரர்கள்!


பிரித்தானியாவின் ஹம்பர்சான்ட் கடலில் நீரில் மூழ்கி உயிரிழந்த ஐந்து ஈழத் தமிழர்களில் இருவர் சகோதரர்கள் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் நால்வர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும், ஒருவர் 27 வயதானவர் எனவும் தெரியவந்துள்ளது.


லண்டனின் கிறின்விச் பகுதியிலிருந்து ஹம்பர்சான்ட் கடற்கரைக்குச் சென்ற குறித்த ஐந்து பேரும் கடற்கரையில் கால்பந்தாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த ஐவரினதும் அடையாளம் உறுதி செய்யப்பட்டதன்படி படி 22 வயதான நிதர்சன் ரவி, 23 வயதான இந்துசன் சிறிஸகந்தராஜா, 22 வயதான கோபிநாதன், 19 வயதான கெனிகன் நாதன் மற்றும் 27 வயதான குருசாந் சிறிதவராஜாஆகியோரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உயிரிழந்தவர்களில் கோபிநாதன் மற்றும் கெனிகன் நாதன் ஆகியோர் சகோதரர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



பிரித்தானியாவில் கடலில் மூழ்கி உயிரிழந்த ஈழத்து இளைஞர்களின் விபரங்கள் - இருவர் சகோதரர்கள்! Reviewed by NEWMANNAR on August 26, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.