மன்னார் எருக்கலம் பிட்டி கிராமத்திற்கு உள்ளக குடி நீர் இணைப்புக்கள் வழங்கி வைப்பு.(படம்)
மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தில் வசிக்கும் வறுமைக்கோட்டிற்குற்பட்ட 104 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் அவர்களில் முதற்கட்டமாக 74 குடும்பங்களுக்கு உள்ளக குடி நீர் இணைப்புக்கள் நேற்று செவ்வாய்க்கிழமை(30) மாலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த உள்ளக குடி நீர் திட்டமானது சுமார் 1.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்விற்கு ஜம்யியதுள் ஸபாம் நிறுவனத்தின் பணிப்பாளர்களான மௌலவி எம்.எஸ்.எம்.ரசீட்,மௌலவி எம்.எஸ்.எம்.தாளிம்,நிறைவேற்று அதிகாரி இப்றாஹிம் அல் -சஹ்ராணி ஆகியோர் கலந்து கொண்டு குறித்த குடி நீர் திட்டத்தை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,வன்னி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் அவர்களினால் குறித்த குடி நீர் திட்டம் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டது.
குறித்த நிகழ்விற்கு எருக்கலம் பிட்டி கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-

மன்னார் எருக்கலம் பிட்டி கிராமத்திற்கு உள்ளக குடி நீர் இணைப்புக்கள் வழங்கி வைப்பு.(படம்)
Reviewed by Author
on
August 31, 2016
Rating:

No comments:
Post a Comment