மாணவர்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.பிறிமூஸ் சிறாய்வா துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு.(படம்)
வறிய மாணவர்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி
வறிய மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும்,குறித்த மாணவர்களின் போக்குவரத்துச் சேவையினை துரிதப்படுத்தும் வகையிலும் தெரிவு செய்யப்பட்ட 20 மாணவ,மாணவிகளுக்கு வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிறிமூஸ் சிறாய்வா இன்று புதன் கிழமை(31) துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தார்.
வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிறிமூஸ் சிறாய்வா தனது வடமாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட 20 மாணவ மாணவிகளுக்கு குறித்த துவிச்சக்கர வண்டிகள் இன்று புதன் கிழமை காலை மன்னார் ஆங்கில பயிற்சி மையத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
-மன்னார் நிருபர்-
மாணவர்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.பிறிமூஸ் சிறாய்வா துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு.(படம்)
Reviewed by Author
on
August 31, 2016
Rating:
No comments:
Post a Comment