சகோதரிகளுக்குத் தொந்தரவு கொடுப்ப வர்களுக்கு முகத்திலேயே குத்துங்கள்--மா.இளஞ்செழியன் கூறியதற்கு அமையவே முகத்தில் குத்தினேன்
யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கூறியதற்கு அமையவே சகோதரியுடன் சேட்டை புரிந்தவரின் முகத்தில் நான் குத்தினேன் என கோப்பாய் பொலிஸாரிடம் நபரொருவர் கூறியுள்ளார். தனது சகோதரியை தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படும் குடும்பஸ்தரை தாக்கியவரே இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம், கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலில் சேட்டை புரிந்ததாக கூறப்படும். உடுவில் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையகுடும்பஸ்தர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மேற்படி குடும்பஸ்தர் நீண்டகாலமாக தனது தங்கைக்குத் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும்,
அதனாலேயே, தொந்தரவு கொடுத்தவரின் முகத்திலேயே தான் குத்தியதாகவும் தங்கையின் சகோதரன் தெரிவித்துள்ளார்.
சகோதரிகளுக்குத் தொந்தரவு கொடுப்ப வர்களுக்கு முகத்திலேயே குத்துங்கள், அதற்கான காரணத்தை நீதிமன்றில் கூறுங்கள் என, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கூறியதற்கமைய,
தான் இவ்வாறு செய்ததாகவும் அப்பெண்ணின் சகோதரன், சுன்னாகம் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை சகோதரிகளோடு சேட்டை புரிந்தால் சேட்;டை புரிபவரின் மூக்கினை உடைக்க முடியும் என நீதிபதி இளஞ்செழியன் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது
சகோதரிகளுக்குத் தொந்தரவு கொடுப்ப வர்களுக்கு முகத்திலேயே குத்துங்கள்--மா.இளஞ்செழியன் கூறியதற்கு அமையவே முகத்தில் குத்தினேன்
Reviewed by NEWMANNAR
on
August 04, 2016
Rating:

No comments:
Post a Comment