இன்றைய கேள்வி பதில் (21/08/2016)-மண்டபம் அகதி முகாமில் எனக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தது.பிறந்த இலங்கைக் குழந்தைகளின் பிறப்புச் சான்றுதலை எவ்வாறு பெறுவது?
கேள்வி:−
எனது அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய வழக்கறிஞர் சுதன் Sir! நான் மன்னாரிலிருந்து ஜெனிற்றா.sir!நாம் யுத்தம் காரணமாக 1998ஆம் ஆண்டு படகு மூலமாக தமிழ் நாடு சென்றோம்.மண்டபம் அகதி முகாமில் எனக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தது.பிறந்த இலங்கைக் குழந்தைகளின் பிறப்புச் சான்றுதலை எவ்வாறு பெறுவது?
பதில்:−அன்புத் தாயாரே! தாங்கள் இந்தியாவில்(தமிழ்நாடு)குழந்தை பெற்றெடுத்த போதிலும் அவர்கள் இலங்கை பிரஜைகளே.இருப்பினும் அதனை இலங்கை அரசில் பதிவு செய்ய வேண்டும்.அப் பதிவினை மேற்கொள்ளுவதற்கு கீழ் குறிப்பிடப்படும் ஆவணங்களுடன் உங்கள் பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
#பெற்றோரின் திருமணச்சான்று அல்லது அதனை உறுதிப்படுத்தும் ஆவணம்.
#பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ்
#பிள்ளைகளின் பட்டியல்(விபரம்)
#பிள்ளை இந்தியாவில்(முகாமில்) பிறந்ததென்பதை உறுதிப்படுத்தும் இந்தியாவில் வழங்கப்பட்ட சான்றிதழ்
#பிள்ளை பிறந்தபோது பெற்றோர் இலங்கைப் பிரஜையாக இருந்தனர் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணம்
#பெற்றோரின் இலங்கைக் கடவுச் சீட்டின் பிரதி(தாங்கள் படகின் மூலம் சட்ட விரோதமாக தமிழ் நாடு சென்றிருந்தாலும் வரும் போது இந்திய அரசு சட்ட ரீதியாகவே இலங்கை அனுப்பி வைத்திருக்கும்)
#பெற்றோர் அகதிகளாக இந்தியா சென்று வந்திருப்பின் அதனை உறுதிப்படுத்தும் ஆவணம்.
#பெற்றோர் தற்போது வதியும் கிராம சேவை அலுவலரின் கடிதம்
பெற்றோரின் விபரங்களை உறுதிப்படுத்தும் ஆவணம்.
#பெற்றோரின் விவாகச் சான்று அல்லது திருமணம் செய்துவைத்த குருவின் கடிதம் அல்லது சத்தியக்கூற்று.
#பெற்றோரின் பிறப்புச் சான்று (இருப்பின்)
#அப்பெற்றோருக்கு பிறந்த அனைத்துப் பிள்ளைகளினதும் பெயர், பால், பிறந்த திகதி, பிறந்த இடம் காட்டும் பட்டியல்.
#அப்பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ்.
#பெற்றோரின் அடையாள அட்டை.
#குடும்பப் பதிவு அட்டை
# கிராம சேவையாளரின் அறிக்கை
அத்துடன் 100 ரூபா முத்திரை மற்றும் தபால் உரை.இவற்றை தங்களது பிரதேச கிராம சேவகர் ஊடாக பிரதேச செயலாளரிடம் சமர்ப்பிக்கவும்.
இன்றைய கேள்வி பதில் (21/08/2016)-மண்டபம் அகதி முகாமில் எனக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தது.பிறந்த இலங்கைக் குழந்தைகளின் பிறப்புச் சான்றுதலை எவ்வாறு பெறுவது?
Reviewed by NEWMANNAR
on
August 21, 2016
Rating:

No comments:
Post a Comment