அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் முன்னாள் போராளிகள் 14 பேர் மருத்துவ பரிசோதனைக்கு பதிவு


மருத்துவ பரிசோதனைக்காக இதுவரை 14 முன்னாள் போராளிகள் தமது விபரங்களை வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக தமிழர் பகுதிகளில் நடைபெற்று வந்த நல்லிணக்க கருத்தறியும் செயலமர்வுகளில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் சிலர் தங்கள் மேல் வேண்டுமென்றே திட்டமிட்டு செயற்படுத்தப்பட்ட நச்சு ஊசிகளை ஏற்றியதான தகவல்க னையும் அன்றாட உணவில் இரசாயனம் கலந்து
பரிமாறியதான தகவலையும் வெளியிட்டு வந்திருந்தனர்.

அந்தவகையில் முன்னாள் திட்டத்தினை அம்பலப்படுத்துவதற்கும் இந்த தகவல் உண்மையாவென கண்டறிவதற்கும் அனைத்து பகுதிகளிலும் பொதுவாகவும் புனர்வாழ்வளிக்கப்பட்டும் இறந்த அல்லது விடுவிக்கப்பட்ட பின்னர் நோய் வாய்ப்பட்டிருக்கும் மற்றும் வாழ்ந்து வரும் முன்னாள் போராளிகளை உடனடியாக தேடியறிந்து பட்டியலிட்டு தருமாறு வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு அண்மையில் வடமாகாண முதலமைச்சரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் கடந்த 3 தினங்களுக்குள் 14 முன்னாள் போராளிகள் தமக்கு மருத்துவ பரிசோதனை தேவையென கூறி கைதடியில் அமைந்துள்ள வடமாகாண முதலமைச்சர் செயலகத்தில் தமது பதிவு களை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த முன்னாள் போராளிகள் தற்போது பரவலாக பேசப்பட்டுவரும் விஷ ஊசிப் பிரச்சினையால் அதிகளவில் மன அழுத்தத்துக்கு உள்ளாகி உள்ளமை தெரியவந்துள்ளது.
எனவே குறித்த முன்னாள் போராளிகளின் மன அழுத்தத்தை குறைத்து அவர்களுக்கு உதவும் வகையில் யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ள மருத்துவ நிபுணர்கள் ஊடாக முன்னாள் போராளிகளை மருத்துவ பரி சோதனைக்கு உட்படுத்தப்படும் நடவடிக்கைகள் வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் யாழ் வந்திருந்த அமெரிக்க படையினரின் மருத்துவக் குழுவினர் மூலம் முன்னாள் போராளிகளை மருத்துவபரிசோதனை செய்யு மாறும் பல தரப்பினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
எனினும் குறித்த மருத்துவர்கள் அதற்கான ஆயத்தத்துடன் இங்கு வருகைதராத காரணத்தால் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வது கடினம் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் முன்னாள் போராளிகள் 14 பேர் மருத்துவ பரிசோதனைக்கு பதிவு Reviewed by NEWMANNAR on August 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.