அண்மைய செய்திகள்

recent
-

மூங்கிலாறு பிரதேச மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம்!


முல்லைத்தீவு-மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலையில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு கட்டடத்தொகுதி சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தினால் உத்தியோகப்பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வு நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளதுடன், சுதந்திர சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்கத்தை முன்மாதிரியாக கொண்டு எயிட்ஸ் ,மலேரியா சலரோகம் நோய்களை அழித்தொழிப்பதற்கான கருத்திட்ட உலக நிதியத்தின் கீழ் இந்த கட்டடத்தொகுதி நிர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடா வெட்டும் நிகழ்வின்போது வடக்கு மாகாண சபை பிரதித்தலைவர் அன்ரனி ஜெயநாதன், பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோரும் இணைத்து நாடாவை வெட்டி திறந்து வைத்துள்ளனர்.

இதேவேளை, இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான ரவிகரன்,சிவநேசன்,கமலேஸ்வரன்,வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன், முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி பூங்கோதை உற்பட பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.



மூங்கிலாறு பிரதேச மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம்! Reviewed by NEWMANNAR on August 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.