அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நானாட்டானில் ஆரம்பமானது கால்நடை வைத்திய சேவை-Photos


கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் கால்நடைகளின் நலனை கருத்தில் கொண்டு மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கால்நடைகளுக்கான நடமாடும் கால்நடை வைத்திய சேவை இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கால்நடை வைத்திய சேவையின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் நானாட்டான் மோட்டைக்கடை அரசியனர் தமிழ் கலவன் பாடசாலையில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்விற்கு,கால்நடை மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்,வடக்கு அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது தெரிவு செய்யப்பட்ட கால்நடை பண்ணையாளர்களுக்கு கால்நடைகளுக்கு தேவையான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.













மன்னார் நானாட்டானில் ஆரம்பமானது கால்நடை வைத்திய சேவை-Photos Reviewed by NEWMANNAR on August 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.