அண்மைய செய்திகள்

recent
-

மாந்தை மர்ம கிணறு அகழ்வு பணியின் போது தடையப்பொருளாக சந்தேகிக்கும் வகையில் 'பல்' ஒன்று மீட்பு.(படங்கள்)



மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மர்ம கிணறு தோண்டும் பணி இரண்டாவது நாளாகவும் இன்று(2) செவ்வாய்க்கிழமை காலை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இடம் பெற்றது.

இன்று கலை 8 மணிமுதல் காலை 11 மணிவரை குறித்த அகழ்வுப்பணிகள் இடம் பெற்றது.

மன்னார் நீதவான் முன்னிலையில் இடம் பெற்ற அகழ்வுப்பணியின் போது இது வரை குறித்த கிணறு 100 சென்றி மீற்றர் வரை அகழ்வு செய்யப்பட்டுள்ளது.

குறித்த அகழ்வு பணியின் போது நீர் வெளிவருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இன்றைய அகழ்வின் போது தடையப்பொருளாக சந்தேகிக்கும் வகையில் 'பல்' ஒன்று மீட்கப்பட்டுள்ளது.மேலும் முள்ளுக்கம்பி துண்டுகள்,கற்கள் என்பனவும் அகழ்வில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

எனினும் மீட்கப்பட்டுள்ள தடையப்பொருட்கள் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

தற்போது வரை 10 அடுக்குகளாக குறித்த கிணறு தோண்டப்பட்டுள்ளது.
மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் மாவட்ட சிரேஸ்ட சட்ட வைத்திய அதிகாரி டபில்யு.ஆர்.எஸ்.ராஜபக்ஸ தலைமையில் இடம் பெற்று வரும் அகழ்வுப்பணியில் அழைக்கப்பட்ட 13 அரச திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் காணாமல் போன உறவுகள் சார்பாக சட்டத்தரணிகளான வி.எஸ்.நிறைஞ்சன், மற்றும் ரனித்தா ஞானராஜா ஆகியோர் கிணறு தோண்டும் இடத்தில் பிரசன்னமாகி இருந்தனர்.

மீண்டும் இன்று மாலை 2 மணிக்கு அகழ்வு பணிகள் நீதவான் முன்னிலையில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.









மாந்தை மர்ம கிணறு அகழ்வு பணியின் போது தடையப்பொருளாக சந்தேகிக்கும் வகையில் 'பல்' ஒன்று மீட்பு.(படங்கள்) Reviewed by NEWMANNAR on August 02, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.