வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா-Photos
"இளைஞர்களை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்ல என்னால் முடிந்த சேவைகளை செய்துகொண்டே இருப்பேன்" வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்
நேற்றையதினம் வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து கொண்டார்கள்
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாகாணப் பணிப்பாளரும் அமைச்சர் அவர்களது இணைப்புச் செயலாளருமான முனவ்வர் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் உரையாற்றிய
றிப்கான் பதியுதீன் அவர்கள்
" தற்போது இளைஞர்களை அனைத்து துறைகளிலும் முன்னேற்றுவதற்காக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் பாரிய பங்களிப்பை வகிக்கின்றது. எதிர்கால தலைவர்களையும் சிறந்த தலைமைத்துவம் கொண்ட சமூகத்தை உருவாக்கும் அனைத்து திட்டத்தினையும் இவ் இளைஞர் சேவைகள் மன்றம் முன்னெடுத்து வருவது உண்மையில் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அதுமட்டுமல்லாது உயர் பதவிகளில் இருக்கும் நாம் இளம் சமூகத்திற்கு ஒரு ஏணியாக இருந்து அவர்களது ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் ஊக்கமளித்து சிறந்த திறன் மிக்க இளைஞர் சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும். இன்று வடமாகாண சபை உறுப்பினராக இருக்கும் நான் எனது சொந்த நிதியானாலும் சரி பன்முகப்படுத்தப்பட்ட நிதியானாலும் சரி பெரும்பான்மையான நிதியினை இளைஞர்களுக்காகவே ஒதுக்கி வருகின்றேன் காரணம் என்னுடைய இளம் பருவத்தில் நாங்கள் பட்ட கஷ்டங்கள் இனி யாரும் அனுப்பிவைக்கக் கூடாது என்பதே. இன்று நாங்கள் இளைஞர்களுக்கு மட்டுமன்றி பாடசாலை மாணவர்கள், வேலை அற்ற இளைஞர்கள், வலது குறைந்தோர், ஆதரவற்றோர் போன்றவர்களுக்கு ரிஷாட் பதியுதீன் பவுண்டேசன் மூலமாக பல உதவிகளை செய்து வருகின்றோம். அரசியல் என்பது யாருக்கும் நிரந்தரம் அல்ல ஆனால் நாங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் அவர்களது நோக்கம் முழுவதையும் நிறைவேற்ற வேண்டியது எங்களது கடமை. எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களும் சரி நானாக இருந்தாலும் சரி எம்மால் இயன்ற அளவு இளைஞர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எந்தவொரு பாரபட்சமுமின்றி செய்ய தயாராக இருக்கின்றோம் " என தெரிவித்தார்
மேலும் இந் நிகழ்வில் வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்ற ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டதும் குறிப்பிடாத தக்கது
வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா-Photos
Reviewed by NEWMANNAR
on
August 02, 2016
Rating:
No comments:
Post a Comment