அண்மைய செய்திகள்

recent
-

மீள்குடியேற்ற செயலணி;கூட்டமைப்பின் கோரிக்கையை நிராகரித்த ரணில்

வடமாகாண மீள்குடியேற்ற செயலணியில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் இணைத்துக் கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஸ்ரீலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.


பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மல நாதன் கடும் விவாதத்தில் ஈடுபட்டார்.

வட­மா­காண மீள்­கு­டி­யேற்றச் செய­லணி வட­மா­காண முத­ல­மைச்சர் சீ.வி.விக்­கினேஸ்­வ­ர­னுடன் கலந்­து­ரை­யா­டியும் ஆலோ­ச­னை­களைப் பெற்­றுமே செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்கும் என சபையில் உறு­தி­படத் தெரி­வித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அமைச்­ச­ரவை உப–­கு­ழு­வாகக் காணப்­படும் மீள்­கு­டி­யேற்றச் செய­ல­ணியில் வடக்கு முதல்­வரை இணைத்துக் கொள்ள முடி­யா­தெ­னவும் சுட்டிக்காட்­டினார்.
அதே­நேரம், வடக்கு மீள்­கு­டி­யேற்றச் செய­ல­ணியில் மூன்று
அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சுக்­க­ளுடன் வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சீ.வி. விக்கி­னேஸ்­வ­ர­னையும் இணைத் துக் கொள்ள வேண்­டு­மென
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தி­ய­மையால் அவ­ருக்கும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­மசிங்க மற்றும் அமைச்சர் சுவா­மி­நாதன் ஆகி­யோ­ருக்­கி­டையில் வாதப்­பி­ர­தி­வா­தங்கள் இடம்­பெற்­றி­ருந்­தன.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை பிர­த­ம­ரு­ட­னான கேள்வி நேரத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன் வட­மா­காண மீள்­கு­டி­யேற்­றத்­திற்­காக அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள மூன்று அமைச்­சுகள் தலை­மை­யி­லான மீள்­கு­டி­யேற்றச் செய­ல­ணி­யொன்றை நிய­மித்­தி­ருக்­கின்­றீர்கள். இந்த செய­ல­ணியில் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வ­ரனோ அல்­லது வடக்கு மக்கள் அதிக ஆணை வழங்­கிய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் மக்கள் பிர­தி­நி­திகள் எவ­ருமே உள்­வாங்­கப்­ப­ட­வில்லை. இதற்கு காரணம் என்ன? வட­மா­காண மக்­களின் மீள்­கு­டி­யேற்றம் தொடர்­பான செய­ல­ணியில் அம்­மக்­களின் பிர­தி­நி­திகள் உள்­வாங்­கப்­ப­டாது எவ்­வாறு அந்த செய­லணி செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்கும். உண்­மை­யிலே வடக்கு மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தை முதன்­மை­யாக கொண்­டி­ருக்­கு­மானால் மத்­திய அர­சாங்கம் ஏன் அப்­பி­ர­தேச பிர­தி­நி­தி­களை உள்­வாங்­காது செய­ல­ணியை அமைத்­துள்­ளது? இதனால் இதற்கு பின்­ன­ணியில் வேறு காரணம் இருக்­கின்­றது என்ற சந்­தேகம் எமக்கும் மக்­க­ளுக்கும் ஏற்­பட்­டுள்­ளது என்றார்.
இச்­ச­ம­யத்தில் எழுந்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, மத்­திய அர­சாங்கம் தனது பொறுப்­புக்­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கின்­றது. அதன் பிர­காரம் தான் வட­மா­கா­ணத்தில் மீள்­கு­டி­யேற்­றத்தை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­காக அமைச்­சர்­க­ளான சுவா­மி­நாதன், ரிஷாட் பதி­யுதீன், பைஸர் முஸ்­தபா ஆகியோர் தலை­மை­யி­லான செய­ல­ணி­யொன்று உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. வட­மா­கா­ணத்தில் மக்கள் தமது சொந்த பிர­தே­சங்­க­ளுக்கு திரும்­பி­யி­ருக்­கின்ற போதும் அவர்­களின் மீள்­கு­டி­யேற்றம் தொடர்­பான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்க வேண்­டி­யுள்­ளது. அதனை துரி­தப்­ப­டுத்தும் முக­மா­கவே இந்த செய­லணி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இந்த செய­லணி மீள்­கட்­ட­மைப்பு மீள் குடி­யேற்றம் தொடர்­பாக ஆராய்ந்­த­றிந்து நட­வ­டிக்­கை­களை துரி­தப்­ப­டுத்­து­வற்­காக உரிய செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்கும். இதற்­காக இச்­செ­ய­ல­ணிக்கு பணிப்­பாளர் ஒருவர் நிய­மிக்­கப்­ப­ட­வுள்ளார்.
வட­மா­காண முத­ல­மைச்­சரின் ஒத்­து­ழைப்­பு­ட­னேயே இந்த செய­லணி தனது செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்கும். மாகாண சபையைப் பொறுத்­த­வ­ரையில் மீள்­கு­டி­யேற்றம் தொடர்­பாக பல செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கின்­றது. அத்­துடன் மேலும் பல செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது. மாகாண சபையின் செயற்­பா­டு­களில் தலை­யீடு செய்­யவோ அல்­லது முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்­தவே நாம் விரும்­ப­வில்லை. மாகாண சபையில் முன்­மொ­ழி­வு­க­ளையும் உள்­வாங்கி பரி­சீ­லனை மேற்­கொள்­வ­தற்கு மீள்­கு­டி­யேற்றச் செய­லணி தயா­ரா­கவே உள்­ளது என்றார்.

அதனைத் தொடர்ந்து சார்ள்ஸ் எம்.பி. மீண்டும் குறிப்பிடுகையில்
மத்­திய அர­சாங்­கத்தின் அமைச்­சர்கள் மூவர் உள்­ள­டக்­கிய வகை­யி­லேயே இந்த செய­லணி உரு­வாக்­கப்­பட்­டள்­ளது. இதன் பின்­ன­ணியில் வேறு கார­ணங்கள் காணப்­ப­டு­கின்­றனவா என்ற சந்­தேகம் எமக்கு உள்­ளது. இந்த செய­ல­ணியில் உண்­மைத்­தன்மை எவ்­வாறு காணப்­படும் என்ற ஐயப்­பாடு எமக்­குள்­ளது. காரணம் இந்த செய­ல­ணியில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் தன்னை மஹிந்த ராஜபக் ஷவின் மகன் எனக் கூறி­ய­வரும் நீதி­மன்­றத்­துக்கு கல்­லெ­றிந்து நீதித்­து­றையை அச்­சு­றுத்­திய குற்றச்சாட்டுக்குள்ளனவருமான அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் இணைத்துக் கொள்­ளப்­பட்­டுள்ளார். இவர் மீது தற்­போது நிதி மோசடி குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவில் வழக்கு உள்­ளது? இத்­த­கைய ஒருவர் அங்­கத்­துவம் வகிக்கும் மீள்­கு­டி­யேற்றச் செய­ல­ணியின் மீது எவ்­வாறு நம்­பிக்கை கொள்ள முடியம். நீங்கள் அவரை அர­சியல் கார­ணங்­க­ளுக்­காக உங்­க­ளுடன் இணைத்துக் கொண்­டி­ருக்­கலாம். ஆனால் அத்­த­கை­யவர் ஒருவர் அங்­கத்­துவம் உள்ள மீள்­கு­டி­யேற்ற செய­லணி எவ்­வாறு உண்மைத் தன்­மை­யு­டை­ய­தா­க­வி­ருக்கும் எனக் கேள்­வி­யெ­ழுப்­பி­ய­தோடு இந்த செல­ணியில் வட­மா­காண முத­ல­மைச்சர் சீ.வி.விக்­னேஸ்­வ­ரனும் மூன்று அமைச்­சர்­க­ளுடன் நான்­கா­வ­தாக இணைத்துக் கொள்­ளப்­பட வேண்டும் என வலி­யு­றுத்­தினார்.
இச்­ச­ம­யத்தில் மீண்டும் எழுந்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அமைச்­ச­ரவை கூட்­டத்தில் தீர்­மானம் எடுக்­கப்­பட்டே மூன்று அமைச்­சர்கள் தலை­மையில் வட­மா­காண மீள்­கு­டி­யேற்றச் செய­லணி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இந்த செய­ல­ணியில் மீள்­கு­டி­யேற்ற அமைச்சின் செய­லாளர் வணிக அமைச்சின் செய­லாளர் உள்­ளூ­ராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செய­லாளர் நிதி அமைச்சின் பிர­தி­நிதி, தேசிய கொள்­கைகள் மற்றும் பொரு­ளா­தார திட்­ட­மிடல் அமைச்சின் பிர­தி­நிதி, வட­மா­கான பிர­தம செய­லாளர் ஆகியோர் இடம்­பெற்­றுள்­ளனர்.
இந்த செய­ல­ணி­யினர் மாகாண முத­ல­மைச்­ச­ரு­டனும் கலந்­து­ரை­யா­டு­வார்கள். அமைச்­சர்கள்
கண்­கா­ணிப்பு செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­பார்கள். மீள்­கு­டி­யேற்­றத்தில் விசே­ட­மாக பல்­வேறு விட­யங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்­டி­யுள்­ளது. முரண்­பா­டு­க­ளின்றி நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது. உதா­ர­ண­மாக, கூறு­வ­தனால் புத்­த­ளத்தில் இடம்­பெ­யர்ந்­துள்ள முஸ்­லிம்­களில் எத்­த­னைபேர் புத்­த­ளத்தில் வசிக்க விரும்­பு­கின்­றார்கள், எத்­த­னைபேர் மீளவும் சொந்த இடங்­க­ளுக்கு திரும்ப விரும்­பு­வார்கள் என்­பதை இனங்­காண வேண்­டி­யுள்­ளது. இவ்­வாறு பல விட­யங்கள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டி­யுள்­ளன என்றார். இதன்­போது மீண்டும் சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன் எம்.பி. வட­மா­காண முத­ல­மைச்­சரை இந்த செய­ல­ணியில் உள்­வாங்­காது விட்டால் நீதி­யான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­படும் எனக் கருத முடி­யாது. நல்­லாட்சி எனக் கூறு­கின்­றீர்கள். ஆனால் மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் மத்­திய அர­சாங்­கத்­திடம் பிர­யோ­கித்த அதே அதி­கார அழுத்­தத்­தையே பிர­யோ­கித்து எம்மை நசுக்­கு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றீர்கள். இவ்­வாறு செயற்­பட்டால் எவ்­வாறு நல்­லி­ணக்கம் ஏற்­படும். மீண்டும் பிரி­வி­னை­களே உரு­வாகும் என கூறினார். அதன்­போது எழுந்த பிர­தமர் ரணில், இந்த செய­ல­ணி­யா­னது அமைச்­ச­ரவை உப­கு­ழு­வாகும். இதில் அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சர்­களே இருக்க முடியும். அவ்­வா­றி­ருக்­கை­யில்தான் மூன்று அமைச்­சர்கள் தலை­மையில் செய­லணி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. வட­மா­காண பிர­தம செய­லாளர் இணைத்துக் கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்றார் என்றார். இச்­ச­ம­யத்தில் குறுக்­கிட்ட சார்ள்ஸ் எம்.பி. அர­சாங்க அதி­கார அமைச்­சர்கள் தீர்­மானம் எடுக்கும் போது எவ்­வாறு எதிர்க்க முடியும். தற்­போது அரச அதி­கா­ரிகள் அதி­கா­ரத்­தினால் அடக்­கப்­ப­டு­கின்­றார்கள். ஆகவே தீர்­மானம் எடுக்கும் அந்­தஸ்தில் உள்ள மூன்று அமைச்­சர்­க­ளுக்கு நிக­ராக வடக்கு முதல்­வரை இணைத்­துக்­கொள்ள வேண்டும் என்றார். இதன்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அமைச்சர் சுவா­மி­நாதன் உங்­க­ளுக்­கு­ரிய (சார்ல்ஸ் எம்.பி.குரிய) விளக்­கத்தை வழங்­குவார் எனக் கூறி அமர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் சுவாமி­நாதன், நாம் அமைச்­ச­ர­வையில் தீர்மானம் எடுத்தே இந்த குழுவை நியமித்துள்ளோம். தயவுசெய்து தவறான புரிதல்களை சொல்லாதீர்கள். நாம் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கமாட்டோம். நானும் தமிழன்தான். நீங்கள் அச்சப்படுவதில் அர்த்தமில்லை. வடக்கு முதல்வர் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மீள்குடியேற்றம் குறித்து எந்த சமயத்திலும் கலந்துரையாடுவதற்கு தயாராகவே உள்ளோம். அவர்களின் ஒத்துழைப்புடனேயே நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார். அச்சமயத்தில் சார்ள்ஸ் எம்.பி. கடுமையான தொனியில் நீங்களும் கடந்த மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தை போலவே அடக்குமுறையை முன்னெடுக்கப்போகின்றீர்கள் என்றார். அவ்வாறே செயற்படுகின்றீர்கள். வடக்கு முதல்வர் இல்லாத மீள்குடியேற்றச் செயலணியை ஏற்க முடியாது என கூறி அமர்ந்தார்.
அச்சமயத்தில் அமைச்சர் சுவாமிநாதனும் இது அமைச்சரவை உபகுழுவொன்றாகும். அமைச்சரவை தீர்மானத்திற்கு ஏற்பவே நியமிக்கப்பட்டது என்பதை மட்டும் தான் என்னால் உங்களுக்கு கூறமுடியும் என கூறியிருந்தார்

இதேவேளை வடமாகாண மீள்குடியேற்ற செயலணி சர்ச்சை குறித்து இவ்வாறு வாதவிவாதம் இடம்பெற்ற வேளையில் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் சபையில் இருந்தபோதிலும் எதுவித குறுக்கீடுகளும் செய்யவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


மீள்குடியேற்ற செயலணி;கூட்டமைப்பின் கோரிக்கையை நிராகரித்த ரணில் Reviewed by NEWMANNAR on August 11, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.